ஷாருக்கான் மகனுக்கு சப்போர்ட் பண்ண ஹிரித்திக் ரோஷன்.. வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்!

மும்பை: போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு உடையதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பல்வேறு பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஆர்யான் கானுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதுவரை அமைதியாக இருந்து வந்த கங்கனா ரனாவத், நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஆர்யான் கானுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டதும், வரிந்து கட்டிக் கொண்டு வந்து வெளுத்து வாங்கி உள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கிடைக்கிற கேப்பில் எல்லாம் பாலிவுட்டை காவு வாங்கி வரும் கங்கனா ரனாவத் இந்த விவகாரத்திலும் அமைதி காக்கவில்லை.

ஆர்யான் கானுக்கு ஆதரவு

ஆர்யான் கானுக்கு ஆதரவு

போதைப் பொருள் விவகாரத்தில் ஏகப்பட்ட ஆதாரங்கள் சிக்கியதை அடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானை கைது செய்துள்ளதாக கூறி வரும் நிலையில், பல பாலிவுட் நடிகர்கள் ஆர்யான் கானுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சல்மான் கான், சுனில் ஷெட்டி என நீண்ட லிஸ்ட்டில் தற்போது ஹிரித்திக் ரோஷனும் இணைந்துள்ளார்.

ஹிரித்திக் ரோஷன் அட்வைஸ்

ஹிரித்திக் ரோஷன் அட்வைஸ்

மை டியர் ஆர்யான்.. வாழ்க்கை ஒரு கரடு முரடான பயணம் போன்றது. இதில், பல இன்ப துன்பங்கள் வரும். கடவுள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். கஷ்டமான பந்துகளை எளிதாக கையாள்பவர்களுக்கே அனுப்புவார். இந்த நேரத்தில் பொறுமையாக இருந்து உனக்கு எதிராக இருக்கும் சவாலை சந்தித்து வெற்றிக் கொள்வாய் என பெரிய அட்வைஸே கொடுத்திருக்கிறார் ஹிரித்திக் ரோஷன்.

விளாசிய கங்கனா

விளாசிய கங்கனா

ஹிரித்திக் ரோஷன் இன்ஸ்டாகிராமில் இப்படியொரு ஆதரவு பதிவை போட்ட நிலையில், நடிகை கங்கனா ரனாவத் உடனடியாக ஆஜராகி வழக்கம் போல பாலிவுட் பிரபலங்களையும் வாரிசு நடிகர்களையும் விளாசித் தள்ளி உள்ளார். ஹிரித்திக் ரோஷனுக்கும் கங்கனாவுக்கும் இடையே ஏற்கனவே பகை உள்ள நிலையில், கங்கனாவின் இந்த பதிவு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மாஃபியா பப்பு

மாஃபியா பப்பு

ஆர்யான் கானை பாதுகாக்க அனைத்து மாஃபியா பப்புகளும் வந்து விட்டனர் என ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆரம்பித்து ஹிரித்திக் ரோஷனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கங்கனா ரனாவத். மேலும், பாலிவுட்டில் வாரிசு நடிகர்களாக இருக்கும் பலர் தான் ஆர்யான் கானுக்கு ஆதரவாக பேசுகின்றனர் என்றும் அவர் சாடியுள்ளார்.

கிரிமினல் குற்றம்

கிரிமினல் குற்றம்

தவறு செய்யாதவர்கள் யாரும் இருக்கமாட்டர்கள், தவறு செய்ததை உணர்த்து திருந்தி நல்ல இடத்துக்கு பலரும் முன்னேறி உள்ளனர். ஒருவர் துயரத்தில் இருக்கும் போது அவர் குறித்து கிசுகிசு பேசுவது தப்பான விஷயம் அதை விட தப்பு செய்தவருக்கு ஆறுதல் சொல்கிறேன் என்கிற பெயரில் தவறான ஊக்கத்தை அளிப்பது அதை விட கிரிமினல் குற்றம் என வெளுத்து வாங்கி உள்ளார் தலைவி நடிகை.

அமீர்கானை அசிங்கப்படுத்தி

அமீர்கானை அசிங்கப்படுத்தி

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானை இதே போலவே விவாகரத்து எக்ஸ்பர்ட் என பகிரங்கமாக அசிங்கப்படுத்தி இருந்தார் கங்கனா ரனாவத். இந்நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யான் கானுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் ஹிரித்திக் ரோஷன் உள்ளிட்ட நடிகர்களை விளாசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X