லாக்டவுனையும் மீறி இர்ஃபான் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!
மும்பை: அரியவகை புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று காலை இயற்கை எய்தினார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி நடிகரான இர்ஃபான் கான் இறப்புக்கு பல பாலிவுட் நடிகர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி கூட செலுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களான கபில் ஷர்மா மற்றும் மிகா சிங் ஆகிய இருவரும் லாக்டவுனையும் மீறி நெருங்கிய நண்பரும் நடிகருமான இர்ஃபான் கானின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இன்று மதியம் 3 மணி அளவில் மும்பையில் உள்ள வெர்சோவா கப்ரஸ்தான் எனும் இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இர்ஃபான் கான் மனைவி சுதாப்பா சிக்தர் அவரது இரண்டு குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மிக சிலரே இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
இர்ஃபான் கான் மறைவுக்கு இந்திய திரையுலகத்தை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி என அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சாய்னா நேவால் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications













