அந்த 2 பிரபல நடிகைகளும் லெஸ்பியனா?.. அதிர்ச்சியை கிளப்பிய உமைர் சந்து.. போஸே ஒரு மார்க்கமா இருக்கே!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர் மற்றும் மலைகா அரோரா இருவரும் லெஸ்பியன்கள் என பாலிவுட்டின் பயில்வான் ரங்கநாதன் உமைர் சந்து போட்டுள்ள போஸ்ட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பாலிவுட்டில் நடிகர்களும், நடிகைகளும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாக கிசுகிசுக்கள் எழுந்து வரும் நிலையில் சிலர் தாங்கள் கே மற்றும் லெஸ்பியன் என்பதையும் வெளிப்படையாக சொல்லி தங்கள் பாலின விருப்பத்தை தைரியமாக அறிவித்துள்ளனர்.

கரீனா கபூர்: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கரீனா கபூர் நடிகர் சைஃப் அலி கானை திருமணம் செய்துக் கொண்டு 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். கர்ப்பகாலத்தில் தான் அனுபவித்த அனுபவங்களை புத்தகமாகவும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், அவரை பற்றி இப்படியொரு அபாண்டமான பழியை போட்டுள்ளாரே என உமைர் சந்துவை பாலிவுட் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
மலைகாவும் கரீனாவும்: மலைகா அரோராவும் கரீனா கபூரும் கவர்ச்சி உடையில் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து இப்படியொரு போஸ்ட்டை உமைர் சந்து போட்டு பாலிவுட்டை பதறவைத்துள்ளார். மலைகா அரோராவும் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து பிரிந்த நிலையில், போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். பாலிவுட்டில் பார்ட்டி, நெருக்கம் என்பது எல்லாம் சர்வ சாதாரணம் என்பதால் கரீனா கபூர் மடியில் மலைகா அமர்ந்துள்ள புகைப்படம் வெளியான நிலையில், அதை வைத்து இப்படியொரு கதை கட்டு விடுகிறார் என திட்டித் தீர்த்து வருகின்றனர்.
பலர் மீது பழி: இவர்கள் மட்டுமின்றி பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகர்கள் பற்றி ஏகத்துக்கும் அவதூறு கருத்துக்களை உமைர் சந்து வெளியிட்டு வருவதாக அவர் மீது தொடர்ந்து ரசிகர்கள் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். ஆனால், படங்களின் பாக்ஸ் ஆபிஸ் பற்றியும் விமர்சனங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வரும் அவருக்கு எதிராக பாலிவுட்டில் எந்தவொரு பிரபலமும் குரல் கொடுக்காமல் இருப்பது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











