twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “தி காஷ்மீர் ஃபைல்ஸ்“ இயக்குநருக்கு மிரட்டல்... ஒய் பிரிவு பாதுகாப்பு !

    |

    டெல்லி : தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன

    இதில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் மற்றும் பாஷா சும்ப்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஊர்வசி கர்ப்பம்... ஆர்ஜே பாலாஜி வீட்ல விஷேசமாம்... நாம தயாராகலாமா? ஊர்வசி கர்ப்பம்... ஆர்ஜே பாலாஜி வீட்ல விஷேசமாம்... நாம தயாராகலாமா?

    தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' அனைத்து முரண்பாடுகளையும் மீறி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் குறைந்த ப்ரோமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தபோதிலும், காஷ்மீர், மும்பை, டெல்லி, மற்றும் கிழக்கு பஞ்சாப் ஆகிய இடங்களிலிருந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக்குவித்துள்ளது.

    மனதை உலுக்கும்

    மனதை உலுக்கும்

    80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீரி பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியதே இப்படத்தின் கதையாகும். இப்படத்தின் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சோகம் கரைபுரண்டு ஓடுகிறது. அழகு கொஞ்சும் காஷ்மீரின் கண்ணீர் கதையை மனதை உலுக்கும் வகையில் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி உள்ளார்.

    பிரதமர் பாராட்டினார்

    பிரதமர் பாராட்டினார்

    காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை துணிந்து எடுத்த இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார். அதேபோல அசாம் மாநில முதலமைச்சரும் இப்படத்தை பாராட்டினார்.

    Recommended Video

    காட்சிகளில் பதைபதைப்பு கண்களை கலங்க வாய்த்த தி காஷ்மீர் ஃபைல்ஸ்
    ஒய் பிரிவு பாதுகாப்பு

    ஒய் பிரிவு பாதுகாப்பு

    இந்தநிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரிக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பின் கீழ், அக்னிஹோத்ரிக்கு எட்டு அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்கப்படும், அதில் இரண்டு கமாண்டோக்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    English summary
    kashmir files director Vivek Agnihotri has been given 'Y' category security with CRPF cover pan India
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X