திருமணத்திற்கு வரவங்களுக்கு அப்படியொரு கண்டிஷன் போட்ட கத்ரீனா கைஃப்.. அது என்ன தெரியுமா?

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் மற்றும் பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் சில விஷயத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நட்சத்திர ஜோடி கண்டிஷன் போட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் லீக்காகி உள்ளன.

பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு உடன் இந்த திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

குறைந்த அளவிலான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

கத்ரீனா கைஃப் கல்யாணம்

கத்ரீனா கைஃப் கல்யாணம்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் நடிகர் விக்கி கெளஷல் திருமணம் வரும் டிசம்பர் 7 முதல் 9ம் தேதி வரை ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்ஸ் எனும் 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 6ம் தேதி திருமணத்திற்காக மணமக்கள் அங்கே செல்கின்றனர்.

செம காஸ்ட்லி

செம காஸ்ட்லி

ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் கோட்டை பர்வாராவில் அதிக பொருட்செலவில் பாலிவுட்டே வியந்து பார்க்கும் அளவுக்கு இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக மணமக்கள் தங்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை மட்டும் 4 லட்சம் ரூபாயாம். மற்ற பிரபலங்கள், உறவினர்கள் நண்பர்களுக்கு என அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து காஸ்ட்லியான ஹோட்டல்களும் புக் செய்யப்பட்டுள்ளன.

கான் நடிகர்கள்

கான் நடிகர்கள்

கத்ரீனா கைஃப் உடன் காதல் கிசுகிசுவில் வலம் வந்த சல்மான் கான் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர் கான், ஆலியா பட், ரன்பீர் கபூர் உள்ளிட்ட முக்கிய பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கத்ரீனா திருமண கண்டிஷன்

கத்ரீனா திருமண கண்டிஷன்

சங்கீத், மெஹந்தி மற்றும் திருமணம் என தொடர்ந்து 3 நாட்கள் ராஜா வீட்டு கல்யாணம் போல பிரம்மாண்டமாக நடைபெற உள்ள கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் திருமணத்திற்கு வருகை தரும் நட்சத்திரங்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் முக்கியமான கண்டிஷனை மணமக்கள் விடுத்துள்ளனர் என்கிற தகவல்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளன.

ரகசிய குறியீடு

ரகசிய குறியீடு

திருமணத்தில் கலந்து கொள்ள போகும் விருந்தினர்களுக்கு ரகசிய குறியீடு வழங்கப்படும் என்றும் செல்போன், கேமரா உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை கொண்டு வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமண புகைப்படங்கள் மற்றும் அங்கே நடக்கும் சடங்குகள் ரகசியமாக காக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டை மணமக்கள் தரப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X