Katrina Kaif: எந்த நடிகையுடன் 2வது திருமணம்... விக்கி கௌஷல் சொன்ன பதில்... ஷாக்கான சாரா அலிகான்!

மும்பை: இந்தியில் விக்கி கெளஷல், சாரா அலிகான் இருவரும் ஜாரா ஹட்கே ஜாரா பச்கே படத்தில் நடித்துள்ளனர்.

லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இந்தப் படம் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்றது.

இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் செய்தியாளரின் சர்ச்சை கேள்விக்கு விக்கி கெளஷல் சொன்ன பதில் வைரலாகி வருகிறது.

 Katrina Kaif: Vicky Kaushal Explains Katrina Kaifs Divorce and His Second Marriage

விக்கி கெளஷல் - கத்ரினா கைஃப் விவாகரத்து
கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர் படத்தில் துணை இயக்குநராக தனது கேரியரை தொடங்கிய விக்கி கெளஷல், தற்போது பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக கலக்கி வருகிறார். பாம்பே வெல்வட், ராஸி, லஸ்ட் ஸ்டோரிஸ், சஞ்சு, தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், சர்தார் உத்தம் போன்ற தரமான படங்களில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் கவர்ச்சிப் புயல் கத்ரினா கைஃப்பையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், விக்கி கெளஷல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஜாரா ஹட்கே ஜாரா பச்கே. லக்‌ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்கி கெளஷல் ஜோடியாக சாரா அலிகான் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், விக்கி கெளஷல், சாரா அலிகான், தயாரிப்பாளர் தினேஷ் விஜன் ஆகியோருடன் ஜாரா ஹட்கே ஜாரா பச்கே படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

 Katrina Kaif: Vicky Kaushal Explains Katrina Kaifs Divorce and His Second Marriage

விக்கி கெளஷல், சாரா அலிகான் இருவரும் கணவன், மனைவியாக நடித்துள்ள இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. கணவன், மனைவியான விக்கியும் சாராவும் விவாகரத்து செய்ய நீதிமன்றம் செல்வதும், அதன் பின்னணியில் நடக்கும் காமெடி கலாட்டாவும் தான் இந்தப் படத்தின் கதை. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிகையாளர் ஒருவர் விக்கி கெளஷலிடம் அவரது திருமண வாழ்க்கை பற்றியும் இரண்டாவது திருமணம் குறித்தும் சர்ச்சையான கேள்வியை எழுப்பினர்.

அதாவது, கத்ரீனா கைஃப்பை விட சிறந்த நடிகை கிடைத்தால் நீங்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா? அது உங்கள் வாழ்க்கைக்கு சரியாக இருக்குமா? எனக் கேட்டார். செய்தியாளரின் இந்த கேள்வியால் விக்கி கவுஷல் மட்டுமின்றி, அவருடன் இருந்த சாரா அலிகான் உட்பட படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர். முக்கியமாக இந்த கேள்வி அந்தக் கேள்வி சாரா அலிகானை குறிவைத்து கேட்பதாக இருந்தது.

இதனால் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் டென்ஷனான விக்கி, அந்த செய்தியாளரை நோக்கி, "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என தெரிகிறதா?. நான் வீட்டுக்குப் போக வேண்டும். இதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகளை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?" என காட்டமாக பதிலளித்தார். மேலும், "இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?. அடுத்த பிறவியிலும் கத்ரீனாவை விட்டுப் போக மாட்டேன்." எனக் கூறியுள்ளார்.

 Katrina Kaif: Vicky Kaushal Explains Katrina Kaifs Divorce and His Second Marriage

தொடர்ந்து பேசிய விக்கி, "நாங்கள் இருவரும் உண்மையாகவே காதலித்து வருகிறோம்" என ஒரேடியாக இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். திருமணமான இரண்டே ஆண்டுகளில் விக்கி - கத்ரினா இடையே விவாகரத்து பிரச்சினையை ஏற்படுத்திவிட்ட அந்த பத்திரிகையாளரும் சைலண்டாக அங்கிருந்து கிளம்பிவிட்டார். இந்நிலையில், கத்ரினா மீதான காதல் குறித்து விக்கி பேசியது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X