ரூ 3 கோடிக்கு கார், 2.7 கோடிக்கு டைமண்ட் நெக்லஸ் ... கத்ரினா ஜோடிக்கு குவிந்த காஸ்ட்லி பரிசுகள்!
மும்பை : நடிகை கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் கத்ரினா மற்றும் விக்கிக்கு மிகவும் காஸ்ட்லியான திருமண பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

கத்ரீனா -விக்கி திருமணம்
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வகையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து இந்த திருமணத்தில் செய்யப்பட்டது.

ரிசார்ட்டில் திருமணம்
ராஜஸ்தானின் சிக்ஸ் சென்ஸ் போர்ட் ரிசார்ட்டில் இந்த திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது திருமணத்தை முடித்து மும்பையில் தாங்கள் வாங்கியுள்ள புதிய வீட்டிற்கு சென்றுள்ளது கத்ரினா கைப் ஜோடி. இதையடுத்து இவர்கள் ஹனிமூனுக்கு எங்கு செல்வார்கள் என்பது குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காஸ்ட்லி திருமண பரிசுகள்
இந்நிலையில் இந்த ஜோடிக்கு கிடைத்துள்ள மிகவும் காஸ்ட்லியான திருமண பரிசுப் பொருட்கள் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. சல்மான்கான், ரன்பீர் கபூர் உள்ளிட்டவர்கள் கோடிக்கணக்கில் தங்களது பரிசுப்பொருட்களை கொடுத்துள்ளனர்.

சல்மானின் காஸ்ட்லி கார்
குறிப்பாக, இத்தகைய சிறப்பு திருமணங்களுக்கு காஸ்ட்லியான கார்களை பரிசாக வழங்குவதை தனது வழக்கமாக கொண்டு உள்ளார் சல்மான் கான். அந்த வகையில் தன்னுடைய மிகவும் நெருங்கிய தோழியான கத்ரீனா கைஃப்பிற்கு அவர் தற்போது 3 கோடி ரூபாய் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரை பரிசளித்துள்ளார்.

விலையுயர்ந்த டைமன்ட் நெக்லஸ்
இதனிடையே தன்னுடைய முன்னாள் காதலியான கத்ரினா கைப்பிற்கு பாலிவுட் ஹீரோ ரன்பீர் கபூர் 2.7 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸை பரிசளித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஒன்றரை லட்சம் மதிப்பிலான பெயிண்டிங் ஒன்றை பரிசளித்துள்ளார்.

காஸ்ட்லி பைக் பரிசு
இதேபோல பாலிவுட் ஹீரோ ரித்திக் ரோஷன் கத்ரினா மற்றும் விக்கி இருவருக்கும் நண்பராக உள்ளார். அவர் விக்கிக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக் ஒன்றை பரிசளித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹீரோயினாக விளங்கும் ஆலியா பட், கத்ரீனா -விக்கி ஜோடிக்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்ப்யூம் பாஸ்கேட் ஒன்றை பரிசளித்துள்ளார்.

ஏராளமான பரிசுகள்
இது போல இன்னும் ஏராளமான விலையுயர்ந்த பரிசுகள் கத்ரினா மற்றும் விக்கி ஜோடிக்கு கிடைத்துள்ளது. புதிதாக திருமணம் ஆகியுள்ள இந்த ஜோடி மிகவும் மகிழ்ச்சியாக காணப்படும் நிலையில் இந்த பரிசுகளும் அவர்களை மேலும் உற்சாகம் கொள்ள செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











