தீபிகா படுகோன் கணவரை புரட்டி எடுக்கும் கீர்த்தி சுரேஷ்.. ஒரு வழியா பாலிவுட் பக்கம் போயிட்டாங்களே!

மும்பை: நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது வாங்கிய கையுடனே பாலிவுட் பட வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு வந்தது. போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் மைதான் படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் ஜோடி என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த படத்துக்காக ஓவராக ஒல்லியான கீர்த்தி சுரேஷ் அவரது தோற்றத்தின் காரணமாகவே அந்த வாய்ப்பை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக பிரியாமணி அந்த படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்கள் ஆன நிலையில், இன்னமும் மைதான் படம் ரிலீஸே ஆகவில்லை என்பது கீர்த்தி சுரேஷ் விட்டா சாபமா என்றும் ட்ரோல்கள் பறந்தன.

மிஸ்ஸான பாலிவுட் வாய்ப்பு: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்காமல் மிஸ்ஸான அந்த பாலிவுட் படமான மைதான் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையிலும், மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் மாற்றப்பட்டுள்ளது.

அந்த படத்தை இழந்த வேதனையால் சரியாக கதைகளை தேர்வு செய்யாமல் பல தோல்வி படங்களில் நடித்துத் தள்ளினார் கீர்த்தி சுரேஷ். டாப் ஹீரோக்களுடன் ஜோடி போடாமல் திணறி வந்த கீர்த்தி சுரேஷ் கடைசியாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.

 Keerthy Suresh bollywood dream finally fulfilled with Ranveer Singhs advertisement

தீபிகா படுகோன் கணவருடன்: ஆனால், நயன்தாரா ஷாருக்கான் படத்திலும் பூஜா ஹெக்டே சல்மான் கான் படத்திலும், ராஷ்மிகா மந்தனா ரன்பீர் கபூர் படத்திலும், சமந்தா வருண் தவான் உடன் இந்தி வெப்சீரிஸிலும் தமன்னா பாலிவுட் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வரும் நிலையில், நமக்கு அந்த வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சே என வருத்தப்பட்டு வந்த கீர்த்தி சுரேஷுக்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங்குடனே ஜோடிப் போட்டு விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில், நடந்த மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியிலும் பாலிவுட்டில் ஒரு விளம்பரப்படத்தில் நடித்துள்ளேன் என கீர்த்தி சுரேஷ் கூறியிருந்தார்.

சபாஷ் சரியான போட்டி: கோடக் வங்கி தொடர்பான விளம்பரத்தில் ரன்வீர் சிங்குடன் சும்மா பறந்து பறந்து அப்படியே ஐ படத்தில் வரும் பாடல் காட்சி போல உருவாக்கப்பட்டு இருந்த விளம்பரத்தில் நடித்து அசத்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கூடிய சீக்கிரமே பாலிவுட் படத்தின் அறிவிப்பையும் கீர்த்தி சுரேஷ் வெளியிடுவார் என்றே தெரிகிறது என இந்த விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X