Raveena Tandon: 3 பேரை கார் வைத்து இடித்தாரா கேஜிஎஃப் நடிகை?.. சுத்துப் போட்டு அடிக்கும் ஊர் மக்கள்!
மும்பை: புனேவில் சமீபத்தில் நடைபெற்ற போர்ஷே ரேஷ் டிரைவிங் கார் விபத்து காரணமாக 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த வழக்குக்குப் பிறகு, தற்போது பாலிவுட் நடிகை ரவீணா டாண்டனும் அவரது டிரைவரும் மும்பையில் படுவேகமாக வாகனம் ஓட்டி சிலரை இடித்து விட்டதாக பாதிக்கப்பட்ட நபர்கள் நடிகை ரவீணா டாண்டனை சுற்றிக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயதான பெண் உட்பட மூன்று பெண்களை ரவீணாவும் அவரது கார் டிரைவரும் தாக்கியதாக உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டி சண்டை போடும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் தற்போது #RaveenaTandon என டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், ரவீணாவை பெண்கள் தாக்கும் பதை பதைக்க வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தயவு செய்து என்னை அடிக்காதீர்கள் என்று நடிகை தன்னை தற்காத்துக் கொள்வதை பார்த்த ரசிகர்கள் பதறிப்போயுள்ளனர்.

மும்பையின் கார்ட்டர் சாலையில் ரிஸ்வி கல்லூரிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக கூறுகின்றனர். குடிபோதையில், சில பெண்கள் வழிமறித்ததை அடுத்து ரவீணா காரை விட்டு இறங்கினார். அப்போது அவரை சூழ்ந்து கொண்டு சிலர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவரது கணவர் அனில் ததானியும் கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கார் விபத்து: சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வரும் அந்த வீடியோவில் ரவீணாவை சுற்றி வளைத்த உள்ளூர்வாசிகள் போலீசுக்கு போன் செய்து மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட ஒருவர், "நீங்கள் சீக்கிரம் ஜெயிலுக்குப் போகப் போறீங்க, என் மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது" என்கிறார். கேமராவை கவனித்த ரவீணா, பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பின்னர், முகமது என்ற நபர் தனது தாய், சகோதரி மற்றும் மருமகள் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காட்டுகிறார். இது குறித்து ரவீணா டாண்டன் இன்னும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
சிக்கலில் ரவீணா டாண்டன்: ரவீணாவின் கார் இடிக்கவே இல்லை என்றும் ரவீணாவிடம் பணம் பிடுங்கவே சிலர் இந்த நாடகத்தை நடத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளில் ரவீணா டாண்டனின் கார் வேகமாக வந்தது போலவே தெரியவில்லை என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக விரைவில் ரவீணா டாண்டன் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 49 வயதாகும் ரவீணா டாண்டன் தமிழில் சாது மற்றும் ஆளவந்தான் படங்களில் நடித்துள்ளார். கேஜிஎஃப் 2 படத்தில் இந்தியாவின் பிரதமர் கதாபாத்திரத்தில் இவர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் பாட்னா சுகிலா படம் வெளியானது. வெல்கம் டு ஜங்கிள் மற்றும் குத்சாதி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











