ஆமா நாங்க லவ் பண்றோம்.. பப்ளிக்காக போட்டு உடைத்த நடிகர்கள்.. கியாரா அத்வானி திருமணம் எப்போ?
மும்பை: கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியின் புதிய எபிசோடில் கியாரா அத்வானி மற்றும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா இருவரும் தாங்கள் காதலித்து வருவதை ஒப்புக் கொண்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் இளம் கவர்ச்சி நடிகை கியாரா அத்வானியும் சித்தார்த் மல்கோத்ராவும் டேட்டிங் செய்து வருவதாக சில ஆண்டுகளாகவே தகவல்கள் லீக் ஆகின.
ஆனால், இருவரும் அதை வெளிப்படுத்தாமல் இருந்த நிலையில் முதன் முறையாக தங்கள் காதலை பப்ளிக்காக போட்டு உடைத்துள்ளனர்.

காபி வித் கரண் சீசன் 7
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காபி வித் கரண் நிகழ்ச்சியின் 7வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். ஜான்வி கபூர், சாரா அலி கான், சமந்தா, அக்ஷய் குமார், அர்ஜுன் கபூர், சோனம் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் இதுவரை பங்கேற்ற நிலையில், அதன் லேட்டஸ்ட் எபிசோடில் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா பங்கேற்றுள்ளனர்.

லவ் பண்றோம்
சும்மாவே பிரபலங்களின் வாயை பிடுங்கி ஷோவை பரபரப்பாக கொண்டு செல்லும் கரண் ஜோஹர் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ராவிடம் அந்த கேள்வியை கேட்காமல் விடுவாரா என்ன? அவர்களது காதல் பற்றி ரூமர்கள் உலாவுதே உண்மையில், உங்களுக்குள் என்ன ரிலேஷன்ஷிப் என அவர் கேட்க, ஆமாம், நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம் என ஓப்பனாக ஒப்புக் கொண்டனர்.

ரசிகர்கள் குஷி
சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி ரசிகர்கள் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளனர். இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடித்த ஷேர்ஷா திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், ரீல் ஜோடிகள் சீக்கிரமாகவே ரியல் ஜோடிகளாக மாற உள்ளனர்.

திருமண பிளான்
அடுத்ததாக அப்படியே சும்மா விடாத கரண் ஜோஹர் உங்கள் திருமண திட்டம் தான் என்ன? என்கிற கேள்வியையும் கேட்டு விட்டார். பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் டோலா டோலா பாட்டுக்கு அவருடனே எங்கள் திருமணத்தில் நானும் சித்தும் நடனமாட வேண்டும் என தனது திருமண பிளானையும் கியாரா அத்வானி வெட்கத்துடன் கூறியுள்ளார்.

ஷங்கர் படத்தில்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் RC15 படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கியாரா அத்வானி. பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் நடித்து வரும் கியாரா அத்வானி சீக்கிரமே தமிழ் படத்திலும் நடிப்பார் என தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











