கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தங்கள் குழந்தைப் பெண்ணின் வருகையைக் கொண்டாடுகிறார்கள்

மும்பை: பிரபல பாலிவுட் தம்பதியர் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் முதல் குழந்தை பிறந்தது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால் ஒரு பிரபலமானவர் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

மானவ் மங்லானி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியாரா மற்றும் சித்தார்த் ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோராகிவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வெளியானதும், ரசிகர்கள் வாழ்த்து செய்திகளால் கமெண்ட் செக்ஷனை நிரப்பத் தொடங்கினர். கியாராவுக்கு ஜூலை 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை குழந்தை பிறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நடிகையின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை.

Kiara Advani And Sidharth Malhotra Welcome Baby Girl Celebrations Begin
Photo Credit:

பிரபலங்கள் வாழ்த்து: இந்த ஆண்டின் தொடக்கத்தில், கியாரா தனது கணவர் சித்தார்த்துடன் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக உறுதிப்படுத்தியபோது பலரது கவனத்தையும் ஈர்த்தார். இது தொடர்பான பதிவில், மகிழ்ச்சி பொங்க ஒரு குறிப்பையும், அழகான புகைப்படத்தையும் பகிர்ந்து குழந்தை பிறக்கவுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார். அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததும் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு அன்பு மற்றும் ஆசீர்வாதங்களை வழங்கினர். ஆலியா பட், சாரா அலிகான், ஏக்தா கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஷில்பா ஷெட்டி போன்ற பிரபலங்கள் புதிய உறுப்பினர் தங்கள் குடும்பத்தில் இணைந்ததை முன்னிட்டு இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கியாரா கப் சிப்: புதிதாகப் பெற்றோரான அவர்கள் தங்கள் மகளின் பிறப்பை உறுதிப்படுத்தவோ அல்லது அது தொடர்பாக எந்த தகவலையுமோ வெளியிடவோ இல்லை. மற்ற பாலிவுட் நட்சத்திரங்களைப் போலவே, அவர்களும் ஒரு அறிக்கையை வெளியிட்டு சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித்தார்த் மற்றும் கியாரா திருமணத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து தங்கள் முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர். ஷெர்ஷா திரைப்படத்தில் கவர்ச்சியான கெமிஸ்ட்ரியுடன் அலைகளை உருவாக்கிய இந்த ஜோடி, பிப்ரவரி 2023 இல் ஜெய்சால்மரில் மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ள இந்த தம்பதியர்களுக்கு வாழ்த்துகளை பலரும் தெரிவித்து வருகிறார்கள். பிலிமி பீட் சார்பாகவும் வாழ்த்துகள்.

More from Filmibeat

Read more about: india bollywood kiara advani
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X