29 வயது கணவருக்கு 31 வயது ஷங்கர் பட நடிகை கொடுத்த லிப் லாக்.. பர்த்டே ட்ரீட்னா அது இதுதான்!

மும்பை: பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கணவரின் 29வது பிறந்தநாளை கியாரா அத்வானி கோலாகலமாக கொண்டாடி உள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

அதன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளன. கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் தங்களுக்குள் முத்தமழை பொழிந்த காட்சிகளும் வெளியாகி உள்ளன. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானியை வாழ்த்தி வருகின்றனர்.

Kiara Advani gifts a super lip lock kiss to her hubby Siddharth Malhotra goes trending

கியாரா அத்வானி: மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான எம்.எஸ். தோனியின் பயோபிக் படத்தில் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் இவர் வைப்ரேட்டர் பயன்படுத்தும் சீன் சர்வதேச அளவில் இவருக்கு ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது.

ஷங்கர் பட ஹீரோயின்: நடிகை கியாரா அத்வானி ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த ஆண்டுக்குள் எப்படியாவது கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆகிவிடும் என ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்து ஷங்கர் இயக்கும் படத்திலும் கியாரா அத்வானி தான் ஹீரோயின் எனக் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகருடன் காதல் திருமணம்: இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ஷேர்ஷா படத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா உடன் கியாரா அத்வானி இணைந்து நடித்தார். ஏற்கனவே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்த நிலையில், அந்த படத்தில் நடித்த இருவரும் தங்கள் காதலை ரசிகர்கள் மத்தியில் வெளிப்படுத்தினர். பின்னர் ஜெய்சல்மாரில் பிரம்மாண்ட அரண்மனையில் கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.

கணவருக்கு லிப் லாக்: 29 வயதாகும் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுக்கு 31 வயதாகும் நடிகை கியாரா அத்வானி பிறந்தநாள் அதுவுமாக கட்டிப்பிடித்து மூச்சு முட்ட லிப் லாக் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். அந்தளவுக்கு தனது கணவர் மீது இருக்கும் காதலை கியாரா அத்வானி வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X