அடடா அழகு அள்ளுதே.. கியாரா அத்வானியின் திருமண ப்ரோமோ வீடியோ - ட்ரெண்டாக்கும் நெட்டிசன்ஸ்

மும்பை: நடிகை கியாரா அத்வானிக்கும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் நடந்த திருமணம் குறித்த ப்ரோமோ வீடியோவை கியாரா அத்வானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. அதன் பிறகு தெலுங்கு படத்திலும் தோன்றிய அவர் டோலிவுட், பாலிவுட் என பிஸியாக நடித்தார்.

கியாரா - சித்தார்த் காதல்

கியாரா - சித்தார்த் காதல்

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் கியாரா அத்வானியும், சித்தார்த் மல்ஹோத்ராவும் முதல்முறையாக நடித்ததன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெர்ஷா படத்தில் இருவரும் நடித்தபோது காதல் மலர்ந்தது. தொடர்ந்து ஜோடியாக பல இடங்களில் தென்பட்ட இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடம் எழுந்தது.

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். திரையுலகிலிருந்து கரண் ஜோஹ்டர், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றனர்.

திருமணத்தில் பரிமாறப்பட்ட தடல்புடல் உணவுகள்

திருமணத்தில் பரிமாறப்பட்ட தடல்புடல் உணவுகள்

இவர்களது திருமணத்தில் இத்தாலி, சீனா, அமெரிக்கா, மெக்சிகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு வகைகள் பரிமாறப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, கியாரா அத்வானியின் தாலியில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வைரமும் பொதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தாலியை பிரபல டிசனைர் சப்யாசாஷி முகர்ஜி உருவாக்கியிருந்தார்.

இன்ஸ்டாவில் வெளியிடப்பட்ட திருமண ப்ரோமோ வீடியோ

இன்ஸ்டாவில் வெளியிடப்பட்ட திருமண ப்ரோமோ வீடியோ

இந்நிலையில் கியாரா அத்வானிக்கும், சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் நடந்த திருமண வீடியோ ஓடிடியில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் எந்த ஓடிடி என இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. சூழல் இப்படி இருக்க கியாரா அத்வானி தனது திருமணத்தின் ப்ரோமோ வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Read more about: kiara advani
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X