யாருப்பா அந்தம்மாவுக்கு ஜாக்கெட் தச்சது.. அம்பானி மகன் திருமணத்தில் ஃப்ரீ ஷோ காட்டிய கிம் கர்தாஷியன்
மும்பை: முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் செல்லப்பிள்ளையான ஆனந்த் அம்பானி பிரபல தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டை நேற்று திருமணம் செய்துக் கொண்டார். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, நயன்தாரா, அட்லீ, மகேஷ் பாபு என பாலிவுட் முதல் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரை பலர் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று நடனமாடிய காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. சச்சின் டெண்டுல்கர், தோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் திருமண விழாவில் பங்கேற்றனர்.

சமீபத்தில், நிதா அம்பானி மும்பையில் பிரம்மாண்டமாக கட்டிய ஜியோ கன்வென்சன் சென்டரில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் சர்வதேச சூப்பர் மாடலான கிம் கர்தாஷியன் மற்றும் WWE வீரரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சினா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அம்பானி மகன் திருமணம்: இந்த ஆண்டு மார்ச் மாதம் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவை அழைத்து வந்து பாட்டு பாட வைத்திருந்தார் அம்பானி. ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் மற்றும் ராம் சரண் என பலர் பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று ஜூலை 12ம் தேதி மும்பையில் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்துக் கொண்டார்.
பிரபலங்களின் அணிவகுப்பு: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, விக்னேஷ் சிவன், நயன்தாரா, மகேஷ் பாபு, அட்லீ, பிரியங்கா சோப்ரா, கிம் கர்தாஷியன், ஜான் சினா, அனன்யா பாண்டே, ஆலியா பட், ஜான்வி கபூர், மானுஷி சில்லர் என இந்திய பிரபலங்கள் மற்றும் சர்வதேச பிரபலங்கள் என பலர் இந்த திருமணத்தில் அணிவகுத்து மணமக்களை வாழ்த்தினர்.
கிம் கர்தாஷியன் பங்கேற்பு: உலகளவில் அதிகபட்சமாக 361 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் அதாவது 36 கோடி ரசிகர்களை கொண்ட சர்வதேச சூப்பர் மாடல் கிம் கர்தாஷியன் அம்பானி மகன் திருமணத்தில் கலந்துக் கொண்டார். இந்திய பாரம்பரிய உடையில் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அணிந்து வந்த உடை கிளாமரின் உச்சிக்கே சென்றது மட்டுமின்றி Wardrobe Malfunction-ம் ஆகி விட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஃப்ரீ ஷோ: கிம் கர்தாஷியன் வேண்டுமென்றே அந்தளவுக்கு கவர்ச்சியாக வந்தாரா? அல்லது அவரது உடையை சரியாக தைக்கவில்லையா? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். உள்ளாடையும் அணியாமல் ஜாக்கெட்டை மட்டும் அப்படி அணிந்து வந்த நிலையில், பாப் அப் ஆகி ஆபாச ஃப்ரீ ஷோவாகவே அவரது வருகை மாறிவிட்டதாக நெட்டிசன்கள் அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











