Monalisa: இதைப் பாருங்க.. கும்பமேளா மோனாலிசாவின் டீப் ஃபேக் வீடியோ.. வடக்கு நண்பர்கள் பார்த்த வேலை!
மும்பை: சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த மகா கும்பமேளா மூலம் பிரபலமடைந்தவர், மோனலிசா போஸ்லே. இவரது வசீகரிக்கும் கண்கள் இவரை ஒரு படத்தின் நடிகையாக மாற்றும் அளவுக்கு அவரைப் பிரபலப்படுத்தியது. கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்றுக் கொண்டு இருந்த அவரை இணையம் ஒரே நாளில் பிரபலமாக்கியது. இவரை நடிகை ஆக்குகிறேன் எனக் கூறிய இயக்குநர் பாலியல் வழக்கில் கைதான நிலையில்,மோனலிசாவின் டீப் ஃபேக் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் உலா வருகிறது.
மோனாலிசா, ஏற்கனவே கூறியதைப்போல் தனது தந்தையுடன் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்றுக் கொண்டு இருந்தவர்தான். இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவ, கும்பமேளாவில் இவர் பிரபலமானார். இதனால் கும்பமேளாவில் கலந்து கொண்டவர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுப்பது, செல்ஃபி எடுப்பது என அவரை பிஸியாக மாற்றிவிட்டார்கள்.

இது என்னடா வம்பா போச்சு என நினைத்த அவரது தந்தை, ஒரு கட்டத்திற்கு மேல், மோனலிசாவை கும்பமேளாவிற்கு அழைத்து வரவில்லை. மாறாக, வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டார். கேட்டதற்கு, வருகிறவர்கள் எல்லாம் எனது மகளுடன் புகைப்படம் எடுக்க, செல்ஃபி எடுக்க கூட்டம் கூடிவிடுகிறது. ருத்ராட்ச மாலைகளை விற்க முடியவில்லை என பதில் அளித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
மோனாலிசா: இப்படியான நிலையில்தான் மோனாலிசாவின் வீட்டிற்கே சென்று, அவரை தனது படத்தில் நடிக்க வைக்கிறேன் எனக் கூறினார், இயக்குநர் சனோஜ் மிஸ்ரா. இது தொடர்பாக அவர் வீடியோவும் புகைப்படங்களும் வெளியிட்டார். அதன் பின்னர் மோனாலிசாவை, தான் செல்லும் இடங்களுக்கும் நிகழ்ச்ச்களுக்கும் அழைத்துச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. இப்படியான நிலையில் மோனாலிசாவிற்கு சினிமாவில் நடிக்க, அதுவும் படத்தின் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறிய இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
பாலியல் குற்றம்: தன்னை நடிகை ஆக்குகிறேன் எனக் கூறிய இயக்குநர் பாலியல் குற்றவாளியா என்ற அதிர்ச்சியுடன் மீண்டும் தனது குடும்பத்தினருடன் இணைந்து விட்டார், மோனலிசா. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இப்படியான நிலையிலும் மோனலிசா, பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இயக்குநர் சனோஜ் மிஸ்ராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை இன்னும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது என்கிறார்கள்.
டீப் ஃபேக்: இப்படியான நிலையில் இணையத்தில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோனாலிசாவின் டீப் ஃபேக் வீடியோக்கள் அதிகம் உலா வருகிறது. அவை குறிப்பாக, கடற்கரையில் மோனாலிசா நடந்து வருவது போலவும், மும்பை விமான நிலையத்தில் மோனாலிசா பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுப்பதைப் போலவும், மார்டன் உடையில் மோனாலிசா இருப்பது போலவும் என பல வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலா வருகிறது. இவை டீப் ஃபேக் வீடியோக்கள் தான் என்றாலும், இதில் தரம் குறைவான வீடியோக்கள் எதுவும் இல்லாததால், மோனாலிசாவின் ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் தட்டிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











