twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாடகி லதா மங்கேஷ்கர் எப்படி இருக்கிறார்... சகோதரி கொடுத்த ஹெல்த் அப்டேட்!

    |

    மும்பை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லதா மங்கேஷ்கர் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கொரோனாவில் கோரபிடியில் பல திரைப்பிரபலங்கள் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.

    காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிகில் நடிகை.. இணையத்தில் கசிந்த திருமண புகைப்படங்கள்!காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிகில் நடிகை.. இணையத்தில் கசிந்த திருமண புகைப்படங்கள்!

    லதா மங்கேஷ்கர்

    லதா மங்கேஷ்கர்

    இந்தியாவின் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரீட்ச் கேண்டி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மேற்கொண்ட சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கவலை அடைந்த ரசிகர்கள்

    கவலை அடைந்த ரசிகர்கள்

    லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் தகவல் பரவியதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த மனக்கவலை அடைந்தனர். ஒரு சில ரசிகர்கள் அவர் பூரண நலம் பெற பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

    லேசான அறிகுறி

    லேசான அறிகுறி

    இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் சகோதரியும் பாடகியுமான உஷா மங்கேஷ்கர், அவருக்கு லேசான கொரோனா தொற்று தான் ஏற்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், வயது மூப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்

    ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்

    லதா மங்கேஷ்கர் இப்போது நன்றாக இருக்கிறார். கொரோனாவால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவருக்கு கொஞ்சம் நிமோனியா உள்ளது, அது இன்று சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என உஷா மங்கேஷ்கர் கூறினார். மேலும், அவருக்காக பிரார்த்தனை செய்த அவரது ரசிகர்கள் நலம் விரும்பிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். இந்த தகவல் லதா மங்கேஷ்கரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    English summary
    Lata Mangeshkar health update
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X