மறைந்த பிரபல நடிகரின் டிவிட்டர் கணக்கை முடக்க முடிவு.. வேண்டவே வேண்டாம் என கெஞ்சும் ரசிகர்கள்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான திலீப்குமாரின் டிவிட்டர் கணக்கை முடக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார். பாலிவுட் சினிமாவின் பழம் பெரும் நடிகரான திலீப் குமார் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.
ட்ராஜிடி கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த திலீப்குமார், தேவதாஸ், கங்கா ஜமுனா, அண்டாஸ், ஆன், ராம் அவுர் ஷியாம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

65க்கும் மேற்பட்ட படங்கள்
50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் ஆக்டிவாக இருந்த திலீப் குமார் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெரைட்டி வெரைட்டியான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அதிக நாட்கள் ஓடிய படங்கள், அதிக வசூலை குவித்த படங்கள் என பல சாதனைகளை படைத்துள்ளார் திலீப்குமார்.

நடிகரின் கடைசி படம்
பாலிவுட்டில் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ள திலீப் குமார் கடைசியாக 1998ஆம் ஆண்டு குயிலா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

ஜூலை மாதம் மரணம்
மும்பை பாந்த்ராவில் வசித்து வந்த திலீப்குமார் வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். கடந்த ஜூலை மாதம் திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமிக்கப்பட்ட திலீப்குமார் ஜூலை 7 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

டிவிட்டர் கணக்கு முடக்கம்
அவரது மறைவு பாலிவுட் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திலீப் குமார் மறைந்து 3 மாதங்கள் ஆன நிலையில் அவரது குடும்ப நண்பரும் செய்தித் தொடர்பாளருமான பைசல் பாரூக்கி சமீபத்தில் திலீப்குமாரின் ட்விட்டர் கணக்கு மூடப்படுவதாக அறிவித்தார்.

கணக்கை முடக்க வேண்டாம்
அவரது மைக்ரோ பிளாக்கிங் தளத்தை டிஆக்டிவேட் செய்யப்போவதாக அவர் அறிவித்த அடுத்த சில நொடிகளிலேயே அவரது ரசிகர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் எதிர்வினைகள் கொட்டித் தீர்த்தன. திலீப்குமாரின் டிவிட்டர் கணக்கை முடக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த அவர்கள், இந்த முடிவால் வருத்தமும், ஏமாற்றமும் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

நினைவிடமாக பயன்படுத்துங்கள்
மறைந்த நடிகரின் நினைவிடமாக கணக்கைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலம் அவரது பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர வேண்டும் என்றும் மறைந்த நடிகரின் பெரும்பாலான ஃபாலோயர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கணவரின் கணக்கை பயன்படுத்திய சாய்ரா
மறைந்த ஐகானிக் நடிகரின் மனைவியும், முன்னாள் நடிகையுமான சாய்ரா பானு இந்த ட்விட்டர் ஹேண்டிலை பயன்படுத்தி அவரது உடல்நலம் குறித்து தனது ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வந்தார். சாய்ரா பானு அடிக்கடி நடிகரும் தனது கணவருமான திலீப்குமாரின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











