Maha Kumbh: கும்பமேளா பூக்காரிக்கு கொட்டிய யோகம்.. ஓவர்நைட்டில் தீபிகா படுகோன் போல மாறிட்டாரே!
மும்பை: கும்பமேளாவில் பூக்களையும் மாலைகளையும் விற்றுக் கொண்டிருந்த சாமானிய பெண் அழகாக இருப்பதை பார்த்து அவரை வட்டம் அடித்த யூடியூபர்களால் திடீரென கும்பமேளா ஸ்டாராகவே மோனாலிசா போன்ஸ்லே மாறியது தான் தற்போது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சென்சேஷனாக மாறியுள்ளது.
மாலை விற்கும் பெண்ணை பல யூடியூபர்கள் கேமராக்களை கொண்டு விரட்டி விரட்டி படமெடுக்க அவர்களது பெற்றோர்கள் தங்கள் பெண்ணை காப்பாற்ற போராடிய காட்சிகளை நேற்று சோஷியல் மீடியாவில் வெளியிட்டு பலரும் திட்டித் தீர்த்து வந்தனர்.

ஆனால், இன்றோ நிலைமையே மாறிவிட்டது. நெற்றியில் வைத்திருந்த பொட்டு, உடுத்தியிருந்த உடை எல்லாம் டோட்டலாக மாறி தற்போது டிசர்ட் அணிந்துக் கொண்டு பாலிவுட் நடிகை போல போஸ் கொடுத்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார் மோனாலிசா. சீக்கிரமே பாலிவுட் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கும் என்கின்றனர்.
பெயருக்கு ஏற்ற அழகு: சேற்றில் முளைத்தாலும் செந்தாமரை என்றுமே அழகு என்பது போல பெயரிலேயே மோனாலிஸா என பேரழகியின் பெயரைக் கொண்டிருந்த அந்த பூ விற்கும் பெண் தனது வசீகர அழகால் அங்கிருந்த இளைஞர்களையும் மகா கும்பமேளாவில் வரும் ஐஏஎஸ், கலெக்டர் பாபா அகோரிக்களை படமெடுக்க சென்ற யூடியூபர்களின் கண்ணில் அணிச்சையாக பட்டு இன்று இந்தியளவில் டிரெண்டாக மாறிவிட்டார்.
உர்ஃபி ஜாவேத் பண்ண சேட்டை: பாலிவுட்டில் மட்டுமின்றி கோலிவுட்டில் கூட டிரெண்டாக ஏகப்பட்ட பெண்கள் அக்காக்களாக மாறி அசிங்கம் பண்ணி வரும் நிலையில், பாலிவுட்டில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக உர்ஃபி ஜாவேத் எல்லாம் மோசமான ஆடைகளையும், ஆபாசமாக ஆடையின்றி போஸ் கொடுத்தும் டிரெண்டானார். ஆனால், உண்மையான அழகு கண்களிலும் முகத்திலுமே காட்டி தீபிகா படுகோன் போல ஆளை மயக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் மோனாலிஸா.
அடுத்த தீபிகா படுகோன்: பெங்களூரில் பிறந்து வளர்ந்த தீபிகா படுகோன் ஷாருக்கானின் ஓம் ஷாந்தி ஓம் படத்தில் நடித்த பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறினார். மோனாலிஸாவும் டார்க் ஸ்கின் டோனில் உள்ள நிலையில், அவர் தான் அடுத்த தீபிகா படுகோன் என்றே நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட ஆரம்பித்துவிட்டனர். சீக்கிரமே இவர் இன்ஸ்டாகிராம் பிரபலமாக போகிறாரா அல்லது பாலிவுட் நடிகையாகும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











