உச்சத்துல சுக்கிரன்.. விமானத்தில் சென்ற கும்பமேளா மோனாலிசா.. வெளியிட்ட செம வீடியோ!

மும்பை: உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்றுக் கொண்டிருந்த சாதாரண பெண் மோனாலிசா போஸ்லேவை திடீரென சில யூடியூப் கேமரா கண்கள் படம்பிடித்து சோஷியல் மீடியாவில் பதிவிட ஓவர் நைட்டில் வைரல் ஆகிவிட்டார். அதன் பின்னர், அவரை காண்பதற்கே கும்பமேளாவில் ஏகப்பட்ட யூடியூபர்கள் கூட்டம் படையெடுக்க தற்போது அவர் சினிமா ஹீரோயினாகவே மாறிவிட்டார்.

இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு கணக்கைத் தொடங்கியுள்ள மோனாலிசாவுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோயர்களாக மாறியுள்ளனர். தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களையும் தனது வாழ்வில் நடைபெற்று வரும் மகிழ்ச்சியான தருணங்களையும் ரசிகர்கள் மத்தியில் ஷேர் செய்து வருகிறார் மோனாலிசா.

Mahakumb fame Monalisha shares her airport experience video

இந்நிலையில், அவர் சமீபத்தில் விமானத்தில் சென்ற நிலையில், விமான நிலையத்திற்கு சென்று தான் ஏறப்போகும் விமானம் வரை காட்டிய வீடியோ ஒன்றை சற்றுமுன் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

உச்சத்தில் சுக்கிரன்: பல இளம் நடிகைகளே திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் வரும் சூழலில் ருத்ராட்ச மாலை விற்றுக் கொண்டிருந்த பெண்ணுக்கு இப்படியோரு யோகம் அடிக்கிறது என்றால் அவருக்கு சுக்கிரன் உச்சத்தில் இருந்துக் கொண்டு அள்ளி அள்ளி கொடுக்கிறான் என ரசிகர்களும் அந்த பெண்ணின் உறவினர்களுமே பேசி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இயக்குநர்: மோனாலிசா போஸ்லே ஹீரோயினாக வைத்து இந்தியில் படமெடுக்கப் போவதாக சனோஜ் மிஸ்ரா அறிவித்தார். மேலும், படத்திற்கு 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' என்றும் டைட்டில் வைத்திருந்தார். ஆனால், இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்ய வைத்ததாக கிளம்பிய புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், மோனாலிசா நிலைமை என்ன ஆகும் என ரசிகர்கள் ஃபீல் பண்ண ஆரம்பித்த நிலையில், தொடர்ந்து பட வேலைகளிலேயே பிசியாகி வருவதாக பதிவிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் மோனாலிசா: மகா கும்பமேளா மூலமாக டிரெண்டான மோனாலிசா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமான நிலையத்துக்குச் சென்று விமானம் ஏறப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல் முறையாக விமானத்தில் ஏறப்போறீங்களா கொடுத்து வச்சவங்க நீங்க என்றும் ஆல் தி பெஸ்ட் இனிமேல் அடிக்கடி வானத்தில் தான் பறக்கப் போறீங்க என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். கூடிய சீக்கிரமே மோனாலிசா நடிக்கும் படம் வெளியாக வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X