கும்பமேளா மோனாலிசாவின் முதல் ஆல்பம் ரெடி.. வீடியோவை வெளியிட்டு சப்போர்ட் பண்ணுங்கனு கோரிக்கை!

மும்பை: கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்றுக் கொண்டிருந்த மோனாலிசாவுக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக அழைத்து வந்த இயக்குநர் பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய நிலையில், மீண்டும் பழைய தொழிலுக்கே மோனாலிசா சென்று விடுவாரோ என ரசிகர்கள் அஞ்சிய நிலையில், பாடகரும் இசையமைப்பாளருமான உத்கார் சிங்குடன் இணைந்து முதல் ஆல்பம் பாடல் வீடியோவில் நடித்து முடித்துள்ளார் மோனாலிசா.

கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வரவேண்டும் என ஏகப்பட்ட பேர் போராடி வரும் நிலையில், மகா கும்பமேளாவில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்த ஏழ்மை நிலையில் இருந்த மோனாலிசாவை மாடலாகவும் நடிகையாகவும் திரையுலகம் மாற்றி விட்டது.

Mahakumbh Monalisa announced her first album song and shares a video
Photo Credit:

மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் சாய் அபயங்கரின் இசையில் வெளியான "சித்திர புத்திரி" பாடலில் போட்டோ ஃபிரேமில் அழகாக இருந்தது போல மோனாலிசாவும் போட்டோ ஃபிரேமில் அழகாக இருப்பது போன்ற காட்சிகளை உருவாக்கி அதன் க்ளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர்.

கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்: கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்கவே கிடைக்காது என சூப்பர் ஸ்டார் பஞ்ச் பேசுவது போல, நடிகையாக வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கூட பார்க்காத மோனாலிசாவை தேடி வந்து அதிர்ஷ்டம் அவரை நடிகையாக மாற்றியுள்ளதை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் எல்லாம் வாயடைத்துப் போயுள்ளனர். பாலிவுட்டில் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என தென்னிந்திய நடிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மோனாலிசாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருவது ஆச்சர்யமான ஒன்று தான். அவருடைய காந்தக் கண்ணழகை பார்த்தே பலரும் அவர் மீது பித்துக் கொண்டுள்ளனர்.

பாலியல் வழக்கில் சிக்கிய இயக்குநர்: 16 வயதே ஆகும் மோனாலிசாவையும் அவரது குடும்பத்தையும் சந்தித்து பேசிய இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, மோனாலிசாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவது தனது பொறுப்பு என்று கூறியிருந்தார். மேலும், "தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்" எனும் படத்திலும் மோனாலிசாவை ஹீரோயின் ஆக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், மற்றொரு இளம் பெண் தொடுத்த பாலியல் வழக்கில் சிக்கி கைதானார் சனோஜ் மிஸ்ரா.

ஆல்பம் பாடலில் மோனாலிசா: சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமா? மீண்டும் பழையபடியே ருத்ராட்ச மாலைகளை விற்க வேண்டியது தானா என நினைத்துக் கொண்டிருந்த மோனாலிசாவுக்கு பாடகரும், இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான உத்கார்ஷ் சிங் தனது புதிய வீடியோ ஆல்பம் பாடலில் நடிக்க வைத்து அழகு பார்துள்ளார். விரைவில் அந்த வீடியோ ஆல்பம் பாடல் வெளியாகும் என அறிவித்து அதன் க்ளிம்ப்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து, தனது முதல் ஆல்பத்துக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சப்போர்ட் செய்ய வேண்டும் என மோனாலிசா கோரிக்கை வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X