கும்பமேளா மோனலிசா பாலிவுட் ஹீரோயினாகவே மாறிட்டாரே.. அதிரடியாக வெளியான படத்தின் டைட்டில்!

மும்பை: மகா கும்பமேளாவில் இந்த ஆண்டு அமாவாசைக்கு புனித நீராட சென்ற 30 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், கும்பமேளாவில் நடந்த ஒரு சூப்பரான விஷயமாக பாசி மணி விற்ற மோனலிசா எனும் பெண் பாலிவுட் நடிகையாகவே மாறியிருப்பது தான்.

இளம் பெண்ணின் கண்ணழகை பார்த்து அசந்துப்போன யூடியூபர்களும் இளைஞர்களும் கும்பமேளாவில் அவரை சுற்றி வட்டமடிக்க திடீரென இந்தியளவில் டிரெண்டாகி விட்டார் மோனலிசா. தீபிகா படுகோன் போல இருக்கிறார் என்றும் வாமிகா கபி போல இருக்கிறார் என்றும் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகு என மோனலிசாவை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Mahakumbh 2025 Mahakumbh Monalisa The Diary of Manipur

அவரும் மாடல் அழகி போல மாறிய நிலையில், தற்போது 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' என்கிற படத்தில் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கணும்: சாதாரண விஜயலட்சுமி சினிமாவில் க்ரூப் டான்சராக இணைந்து பின்னர் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையே வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு முன்னணி கவர்ச்சி நடிகையாக மாறி அசத்தினார். சின்னத்திரையில் விஜேவாக இருந்த டயானா மரியம் குரியன் தான் லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். சாதாரண பெண்கள் ஹீரோயின்களாக மாறி சாதித்த கதைகளை நிறைய கேட்டிருக்கிறோம். ஆனால், நெப்போடிசம் அதிகம் உள்ள இந்த காலக்கட்டத்தில் பாலிவுட்டில் சாதாரண பாசி மணி விற்கும் பெண் ஹீரோயினாக மாற வாய்ப்பே இல்லாத சூழலில் தனது அழகால் அதிர்ஷ்டம் அடிக்க ஹீரோயினாகவே மாறிவிட்டார் மோனலிசா.

தி டைரி ஆஃப் மணிப்பூர்: இந்தியில் கஸ்னவி, ஸ்ரீநகர், சஷாங்க், காசி டு காஷ்மீர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் உருவாக உள்ள 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' என்கிற படத்தில் ஹீரோயினாக கும்பமேளா புகழ் மோனலிசா நடிக்கப் போவதாக வீடியோ அறிவிப்பை இயக்குநர் வெளியிட்டுள்ளார். மேலும், படத்தின் டைட்டில் லுக் போஸ்டர்களும் வெளியாகி பாலிவுட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

ஏகப்பட்ட ரசிகர்கள்: மோனலிசாவின் நேச்சுரல் பியூட்டியை பார்த்து இந்தியளவில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். கும்பமேளாவிலேயே 10 கோடி ரூபாய் வரை அவர் சம்பாதித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பலரையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளன. இந்த படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கவும் அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: mahakumbh 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X