கும்பமேளா மோனாலிசா நாலு சுவத்துக்குள்ள அடைபட்டு என்ன பண்றாரு பாருங்க.. பட வாய்ப்பு கிடைக்குமா?

மும்பை: உத்தர பிரதேசத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்றுக் கொண்டு இருந்த கண்ணழகி மோனாலிசா போன்ஸ்லேவை சில யூடியூபர்கள் சுற்றி வீடியோக்களை எடுத்து வெளியிட ஓவர்நைட்டில் சமூக வலைதளம் மூலம் சென்சேஷனலாக மாறிவிட்டார். அதன் பின்னர், தினமும் அவரை வேலை பார்க்க விடாமல் பலரும் அவரை சுற்றி வீடியோக்கள் எடுக்க ஆரம்பிக்க அனைத்து மீடியாக்களிலும் அவரது பெயர் அடிபடத் தொடங்கியது.

அடுத்த ஐஸ்வர்யா ராய் என்றும் தீபிகா படுகோன் மாதிரி இருக்கிறார் என்றும் மோனாலிசாவை ஓவர் ஹைப் ஏற்ற அவரை தேடி அதிரடியாக பாலிவுட் சினிமா வாய்ப்பும் வந்தது தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Mahakumbh Star Monalisa Bhosle send a dance video reel to her instagram followers

மாலைகளை விற்கும் பணியை விட்டுவிட்டு மோனாலிசாவும் மாடல் அழகி போல மாறி மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். ஆனால், அவரை வைத்து படம் இயக்குகிறேன் என வந்த அந்த இயக்குநர் பாலியல் வழக்கில் கைதான நிலையில், மோனாலிசாவின் பட வாய்ப்பு என்ன ஆகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் ஒன்று தீயாக பரவி வருகிறது.

குயிலப்புடிச்சு கூண்டில் அடச்சு: சாதாரண பெண்ணாக ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வந்த கும்பமேளா மோனாலிசாவை பாலிவுட்டுக்கு கொண்டு வந்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இதற்கு முன்னர் டிக்டாக் பிரபலத்தை ஆசை காட்டி திருமணம் செய்துக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டு அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து 3 முறை கருக்கலைப்பு செய்ய வைத்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கொடுத்த புகாரை தொடர்ந்து பாலியல் வழக்கில் இயக்குநர் சனோஜ் மிஸ்ராவை கைது செய்துள்ளனர்.

நான்கு சுவற்றுக்குள் மோனாலிசா: மாடலாக மாறிவிட்ட மோனாலிசா எப்படியாவது பாலிவுட்டில் நடிகையாக ஆகிவிட வேண்டும் என இன்ஸ்டாகிராமில் படு பிசியாக பல வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். தற்போது நான்கு சுவற்றுக்குள் உட்கார்ந்துக் கொண்டு நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். எழுந்து நின்றுக் கூட ஆட முடியாதாம்மா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

எப்படி இருந்த நீ இப்போ இப்படி ஆகிட்ட: மோனாலிசாவின் பழைய வீடியோக்களையும் நெட்டிசன்கள் ஷேஎர் செய்து எப்படி இருந்த நீ இப்போ இப்படி ஆகிட்ட என ஏகப்பட்ட கம்பேரிசன் வீடியோக்களும் மீம்களும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகின்றன. தி டைரி ஆஃப் மணிப்பூர் படத்தில் மோனாலிசா கமிட் ஆகியுள்ள நிலையில், அந்த படத்தை முடித்துவிட்டு ரிலீஸ் செய்வாரா? அல்லது புதிய பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்குமா? என கேள்விகள் அதிகரித்துள்ளன.

உஷாரா இருங்க: சினிமாவில் நடிக்க வந்தது மகிழ்ச்சி தான் என்றும் ஆனால், சனோஜ் மிஸ்ரா போன்ற காமக்கொடூரர்கள் அதிகம் உள்ள இண்டஸ்ட்ரி பார்த்து உஷாரா இருங்க என ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர். கேரளாவிலும் பாலியல் புகாரில் சிக்கிய பாபி செம்மனூர் இவரை கேரளாவுக்கே நகைக்கடை ஒன்றை திறக்க அழைத்து வைர நெக்லஸ் அணிவித்த காட்சிகளும் ரசிகர்களை ஷாக் ஆக்கின. ஏற்கனவே நடிகை ஹனி ரோஸ் பாபி செம்மனூர் மீது பாலியல் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X