Malaika Arora: அப்பா.. உடைஞ்சு போய் அழுத உயிரே பட நடிகை.. அர்ஜுன் கபூர், சல்மான் என பாலிவுட்டே ஆஜர்
மும்பை: பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா இன்று காலை தனது அடுக்கு மாடி குடியிருப்பில் 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டது ஒட்டுமொத்த பாலிவுட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஷூட்டிங் ஒன்றுக்காக புனேவுக்கு மலைகா அரோரா சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பாவின் மரணம் பற்றி கேள்விப்பட்டதும் வீட்டுக்கு அழுது கொண்டே ஓடி வந்த மலைகா அரோராவின் வீடியோ காட்சிகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.

மலைகா அரோராவின் அம்மாவின் வீட்டில் நடைபெற்று வரும் இறுதிச்சடங்கில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் கலந்துக் கொண்டு நேரில் அஞ்சலி செலுத்தி மலைகா அரோராவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மலைகா அரோரா அப்பா மரணம்: உயிரே படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து ரயில் மீது ஏறி கவர்ச்சி குத்தாட்டம் போட்ட பாலிவுட் நடிகை மலைகா அரோரா ஏகப்பட்ட படங்களில் நடித்து கலக்கியுள்ளார். அவரது தந்தை அனில் அரோரா இன்று காலை 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டது.
அழுது கொண்டே ஓடி வந்த மலைகா அரோரா: பாலிவுட் நடிகை மலைகா அரோரா தனது தந்தையின் மரண செய்தியை அறிந்ததும் ஷூட்டிங்கை எல்லாம் கேன்சல் செய்து விட்டு அம்மாவின் வீட்டுக்கு அழுது கொண்டே ஓடிவந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
அர்ஜுன் கபூர் வருகை: மலைகா அரோராவின் காதலரான அர்ஜுன் கபூர், மலைகா அரோராவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கான் உள்ளிட்ட பலர் அனில் அரோராவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றுள்ளனர். மேலும், பாலிவுட்டில் பல முன்னணி பிரபலங்களும் மலைகா அரோராவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
சல்மான் கான் அஞ்சலி: பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானும் விஷயம் அறிந்ததும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அனில் அரோரா கடந்த சில நாட்களாகவே ரொம்பவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும் உடல்நலக்குறைவு காரணமாக ரொம்பவே சங்கடப்பட்டு பேசி வந்ததாகவும் அவரது வீட்டின் அருகே உள்ளவர்கள் பேட்டியளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











