Malaika Arora Father Suicide: 6வது மாடியில் இருந்து குதிச்சிட்டாரு.. மலைகா அரோரா தந்தை தற்கொலை
மும்பை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த உயிரே படத்தில் "தக்க தையா தையா" பாடலுக்கு ரயில் மீது ஏறி கவர்ச்சி நடனம் ஆடிய பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா இன்று காலை தற்கொலை செய்துக் கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் படங்களை தமிழில் தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரை நடிகை மலைகா அரோரா காதலித்து வந்த நிலையில், குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்பட்டு வந்தன.

50 வயதை நெருங்கிய மலைகா அரோரா வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது அப்பா மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் என போலீஸார் முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
மலைகா அரோரா தந்தை மரணம்: மலைகா அரோரா மும்பையில் இருந்து புனேவுக்கு சென்றிருந்த நிலையில், அவரது தந்தை அனில் அரோரா 6வது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை விட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார் அனில் அரோரா என குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்த விவரம் அறிந்த உடனே புனேவில் இருந்து நடிகை மலைகா அரோரா மும்பைக்கு திரும்பியுள்ளார்.
பிரபலங்கள் நேரில் அஞ்சலி: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக இந்த வயதிலும் புதிய படங்களில் கவர்ச்சி நடனம் போட்டு வரும் மலைகா அரோரா ஃபிட்னஸ் மூலமும் ஏகப்பட்ட இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். அவரது தந்தை தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்த நிலையில், மலைகா அரோராவின் தந்தையின் இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. மலைகா அரோராவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கான், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். போனி கபூர், மலைகா அரோராவின் காதலர் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலர் வருவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்கொலை கடிதம் இல்லை: மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், எந்தவொரு தற்கொலை கடிதமும் கிடைக்கவில்லை என போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். சிறு வயதில் மலைகா அரோராவின் அம்மாவை விவாகரத்து செய்து விட்டு அப்பா சென்று விட்டார் என்றும் கஷ்டப்பட்டு அம்மா தன்னையும் தனது சகோதரியையும் வளர்த்தார் என மலைகா அரோரா த்ரோபேக் பேட்டி ஒன்றில் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால், சமீப காலமாக மீண்டும் அப்பாவை சந்தித்து பார்த்துக் கொண்டிருந்த மலைகா அரோரா தனது தந்தையின் திடீர் மரணத்தால் வேதனையடைந்துள்ளார்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











