பிரேக்கப் எல்லாம் பண்ணலைங்க.. எல்லாருக்கும் பொறாமை.. மலைகா அரோரா மட்டும் பதறி துடிக்கிறாரே?
மும்பை: தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அவரது முன்னாள் மனைவி மோனோ சவுரிக்கு மகனாக பிறந்த அர்ஜுன் கபூர் உதவி இயக்குநராக சினிமாவில் அறிமுகமானார். சல்மான்கான் நடித்த வான்டட் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அர்ஜுன் கபூர் 2011 ஆம் ஆண்டு இசாக்ஜாதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அவுரங்கசிப், கன் டே, 2 ஸ்டேட்ஸ், கி அண்ட் கா, ஹாஃப் கேர்ள் பிரண்ட், நமஸ்தே இங்கிலாந்து, பானிபட், பூத் போலீஸ், ஏக் வில்லன் ரிட்டன்ஸ், குட்டே, தி லேடி கில்லர் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அர்பிதா கான், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோருடன் பார்ட்னராக பல ஆண்டுகள் வாழ்ந்து வந்த அர்ஜுன் கபூர் கடைசியாக 2018ம் ஆண்டு முதல் மலைகா அரோராவுடன் பார்ட்னராக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்.
பிரேக்கப் ரூமர்: அடிக்கடி தங்களை பற்றிய செய்திகளை கசிய விட வேண்டும் என இவர்களே பிரேக்கப் ரூமர்களை வெளியிடுகிறார்களா என்றே ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு அடிக்கடி இவர்களை பற்றிய பிரேக்கப் ரூமர்கள் வந்துக் கொண்டே இருக்கின்றன. மலைகா அரோராவின் 45வது வயதில் அவரை காதலிக்க ஆரம்பித்த அர்ஜுன் கபூர் 50 வயதான நிலையிலும் காதலித்து வருகிறார். சில மாதங்களாக இருவரும் இணைந்து எங்கேயும் தென்படாமல் இருக்கவும், இருவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் சோலோ சோக கீதங்கள் வாசித்து வந்த நிலையிலும் இருவரும் பிரிந்து விட்டதாக நேற்று பாலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
மலைகா அரோரா மேனேஜர் தகவல்: ஆனால், இருவரும் பிரியவில்லை என்றும் அது முற்றிலும் வதந்தி தான் என மலைகா அரோராவின் மேனேஜர் சமீபத்தில் மீடியாவுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால், அர்ஜுன் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகாமல் அமைதியோ அமைதியென அந்த ஏரியா இருப்பது தான் பலருக்கும் சந்தேகத்தை கிளப்புகிறது.
மகன் கேட்ட கேள்வி: மலைகா அரோராவுக்கு ஏற்கனவே அர்பாஸ் கானுடன் திருமணமாகி விவாகரத்து ஆகி விட்டது. அவருக்கு 22 வயதில் அர்ஹான் கான் எனும் மகன் உள்ளார். சமீபத்தில், மகனுடன் பேட்டி ஒன்றில் பேசிய மலைகா அரோரா மகன் எந்த வயதில் விர்ஜினிட்டியை இழந்தாய் எனக் கேட்டார். அதற்கு, நீங்க எப்போ திருமணம் செய்துக் கொள்ளப் போறீங்க எனக் கேட்டு மடக்கினார்.
திருமணம் செஞ்சிக்க வாய்ப்பே இல்லை: அர்ஜுன் கபூர் மற்றும் மலைகா அரோரா இருவருமே பார்ட்னர்களாக பழகி வரும் சூழலில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள வாய்ப்பில்லை. அர்பிதா கான் மற்றும் சோனாக்ஷியை ஏற்கனவே அர்ஜுன் கபூர் காதலித்து கழட்டி விட்ட நிலையில், மலைகா அரோராவை அவர் பிரேக்கப் செய்து விடுவார் என்றே சினிமா வட்டாரத்தில் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், இப்போதைக்கு மலைகா அரோரா சைடில் இருந்து பிரேக்கப் என வெளியானது வதந்தி எனக் கூறப்பட்டு இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகவும் இதே போன்ற வதந்தி இவர்கள் குறித்து வந்துக் கொண்டே தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேனேஜர் எல்லாம் வச்சு விளக்கம் கொடுப்பதற்கு பதிலாக இருவரும் இணைந்து ஒரு போட்டோ வெளியிட்டாலே ரசிகர்கள் சைலன்ட் ஆகிவிடுவார்களே?


Click it and Unblock the Notifications











