51 வயது மலைகா அரோரா போட்டு இருக்குற டாட்டூ பார்த்தீங்களா?.. புதுசா பாய் ஃபிரெண்ட் சிக்கிட்டாரா?

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மூத்த மகன் அர்ஜுன் கபூரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த சீனியர் கவர்ச்சி நடிகை மலைகா அரோரா சமீபத்தில் அர்ஜுன் கபூரை பிரேக் அப் செய்து பிரிந்த நிலையில், புதிதாக தனது கையில் டாட்டூ ஒன்றை பச்சைக் குத்தியுள்ளார்.

திடீரென மலைகா அரோரா கையில் இருக்கும் டாட்டூவை பார்த்த ரசிகர்கள் புதிய பாய் பிரண்டின் பெயரா என கிண்டல் செய்து வரும் நிலையில், அதற்கான அர்த்தம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Malaika Arora new tattoo and its meaning goes trending in social media

யோகா செய்து 51 வயதிலும் நச்சென ஃபிட்டாக இருக்கும் நடிகை மலைகா அரோரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் அவரது கையில் உள்ள டாட்டூ ரசிகர்களின் கவனத்தை அதிகம் கவர்ந்துள்ளது.

51 வயது மாடல் நடிகை: ஹாலிவுட்டில் ஜெனிபர் லோபஸ் 50 வயதை கடந்த நிலையிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு கவர்ச்சி தேவதையாக வலம் வந்து கொண்டிருப்பதைப் போல, இந்தியாவிலும் நடிகை மலைகா அரோரா மாஸ் காட்டி வருகிறார். ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு அர்பாஸ்கான் என்பவரை திருமணம் செய்த மலைகா அரோராவுக்கு 20 வயதை கடந்த அர்ஹான் கான் எனும் மகன் உள்ளார். 2017 ஆம் ஆண்டு தனது கணவரை பிரிந்த நடிகை மலைகா அரோரா பாலிவுட்டின் இளம் நடிகர் அர்ஜுன் கபூருடன் காதலில் விழுந்த நிலையில், இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

புதிய டாட்டூ: அர்ஜுன் கபூர் மற்றும் மலைகா அரோரா காதலிக்கத் தொடங்கியதில் இருந்தே இருவரும் சீக்கிரமாக பிரிந்து விடுவார்கள் என பலமுறை பிரேக்கப் வதந்திகள் வெளியாகி வந்த நிலையில், கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் அந்த வதந்திகள் எல்லாம் உண்மையாகி விட்டன. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது மலைகா அரோரா கையில் புதிய டாட்டூ ஒன்று பச்சைக் குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

என்ன அர்த்தம்?: Sabr Shukr என்கிற வார்த்தையை தான் தனது கையில் பச்சைக் குத்திக் கொண்டு பைசப்ஸ் காட்டுவது போல காட்டியுள்ளார் நடிகை மலைகா அரோரா. அந்த டாட்டூவை பார்த்த ரசிகர்கள் அடுத்த பாய் பிரெண்டின் பெயரா என கேள்வி எழுப்ப அதற்கான அர்த்தம் Sabr என்றால் Patience (பொறுமை). Shukr என்றால் Gratitude (நன்றியுணர்வு) எனக் கூறுகின்றனர். இவை இரண்டுமே அரேபிய வார்த்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குவியும் லைக்ஸ்: காதல் தோல்விக்குப் பிறகு தனித்து வாழ்ந்து வரும் நடிகை மலைகா அரோராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டு வரும் யோகா வீடியோக்கள் மற்றும் ஃபிட்டாக வைத்து இருக்கும் அவரது உடல் அமைப்பை பார்த்து அவருக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. அர்ஜுன் கபூர் நடிப்பில் கடைசியாக மேரே ஹஸ்பண்ட் கா பீவி படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அவரது அடுத்த பட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறுகின்றனர். அர்ஜுன் கபூரின் சகோதரிகளான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் பல படங்களில் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X