Malaika Arora - மலைக்கா அரோரா பகிர்ந்த நிர்வாண ஃபோட்டோ - வைத்து செய்யும் நெட்டிசன்கள்

மும்பை: Malaika Arora (மலைக்கா அரோரா) பாலிவுட் நடிகை மலைகா அரோரா பகிர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அவருக்கு பலரும் கண்டனத்தையும் தெரிவித்துவருகின்றனர்.

இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய படம் தில் சே. தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஷாருக்கான், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்தப் படம் எந்த அளவு வரவேற்பைப் பெற்றதோ அதே அளவு வரவேற்பை பெற்றது படத்தில் இடம்பெற்ற தைய தையா பாடல். அந்தப் பாடலில் நடனமாடியவர் மலைக்கா அரோரா.

 Malaika Arora Shares arjun kapoors Nude Photo

முதல் திருமணம்:

அதனைத் தொடர்ந்து பல பாடல்களுக்கு நடனமாடியும், படங்களிலும் நடித்த அவர் அர்பாஸ் கான் என்பவரை 1998ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், அர்பாஸ் கான் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை உடையவர். சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை 2017ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதனையடுத்து மலைக்கா அரோரா சிங்கிளாக இருந்தார்.

காதலில் விழுந்த மலைக்கா:

அர்பாஸ் கானை பிரிந்த பிறகு நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூரின் முதல் மனைவி மகனான நடிகர் அர்ஜுன் கபூருடன் காதலில் விழுந்தார் மலைகா அரோரா. அர்ஜுன் கபூரைவிட மலைகா அரோரா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க இரண்டு பேருமே அதைப்பற்றி கவலைகொள்ளாமல் லிவிங் டூ கெதராக வாழ்ந்துவருகின்றனர்.

 Malaika Arora Shares arjun kapoors Nude Photo

மலைக்கா பகிர்ந்த புகைப்படம்:

இந்நிலையில் இருவரும் வெளியில் செல்லும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் மலைகா அரோரா. அது ட்ரெண்டாகும். ஆனால் இப்போது அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது வீட்டில் அர்ஜுன் கபூர் துணி எதையும் அணியாமல் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

 Malaika Arora Shares arjun kapoors Nude Photo

வைத்து செய்யும் நெட்டிசன்கள்;

இருவருக்குமான வயது வித்தியாசம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என இருவருக்கும் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தே வந்தனர். ஆனால் இந்தப் புகைப்படம் பலரிடம் கண்டனத்தை பெற்றுத்தந்துள்ளது. இரண்டு பேருமே காதலர்கள்தான், கணவன் மனைவி போல் வாழ்கிறார்கள்தான். அதற்காக ஒரு ஆணின் நிர்வாண புகைப்படத்தை இப்படி பகிர்வது நாகரீகம் இல்லை என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X