Mallika Sherawat - நடுராத்திரி ஹீரோ கூப்பிட்டால் ஹீரோயின் போக வேண்டும் - நடிகை ஓபன் டாக்

சென்னை: Mallika Sherawat (மல்லிகா ஷெராவத்) நடுராத்திரி ஹீரோ கூப்பிட்டால் ஹீரோயின் போக வேண்டும் அப்போதுதான் அவரது நட்பு வட்டத்தில் இருக்கும் நிலைமை இருப்பதாக மல்லிகா ஷெராவத் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மல்லிகா ஷெராவது. ஹிந்தியில் 2002ஆம் ஆண்டு வெளியான ஜீனா ஷிர்ஃப் மெர்ரே லியே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல ஹிந்தி படங்களில் நடித்த அவருக்கு பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களே கிடைத்தன. கவர்ச்சியாக நடித்தாலும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார்.

Mallika Sherawat Open Talks about adjustment

தமிழில் மல்லிகா: ஹிந்தியில் நடித்துக்கொண்டிருந்த மல்லிகா ஷெராவத் தமிழில் தசாவதாரம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் ஃப்ளெட்சர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக தோன்றியிருந்தார். படம் ஹிட்டானாலும் மல்லிகாவின் கதாபாத்திரம் பத்தோடு பதினொன்றாக போய்விட்டது. இருப்பினும் அந்தப் படத்திலும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்திருந்தார்.

ஒஸ்தியில் நடனம்: இதற்கிடையே மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் மையா மையா பாடலுக்கு செம ஆட்டம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தசாவதாரம் படத்துக்கு பிறகு சிம்பு நடிப்பில் தரணி இயக்கிய ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அதிலும் மல்லிகா ஷெராவத்தின் நடிப்பு மிகச்சிறப்பாகவே இருந்தது. இவர் கடைசியாக ஆர்கே/ஆர்கே என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார்.

மல்லிகாவின் பேட்டி: இந்நிலையில் மல்லிகா ஷெராவத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "என்னுடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் கேட்ட சில விஷயங்களுக்கு நான் சமரசம் செய்துகொள்ளவில்லை. நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற கதாநாயகியைத்தான் ஹீரோக்கள் விரும்புகிறார்கள். எந்த நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறாரோ அவருக்குத்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள்.

வீட்டிற்கு வர சொன்னால்: நான் அட்ஜெஸ்ட்மெண்ட்டை ஒத்துக்கொள்வதில்லை. வேறு ஒருவரி பாலியல் ஆசைக்கு நான் ஆளாக விரும்பவில்லை. ஒரு ஹீரோ உங்களை நள்ளிரவு அவரது வீட்டுக்கு வர சொன்னால் நீங்கள் செல்ல வேண்டும். அப்போதுதான் நீங்கள் அந்த ஹீரோவின் நட்பு வட்டத்தில் இருக்க முடியும். அவர் அழைக்கும்போது நீங்கள் செல்லவில்லை என்றால் அந்தப் படத்திலிருந்து தூக்கி எறியப்படுவீர்கள்.

எனக்கு அது பிடிக்காது: அட்ஜெட் செய்யும் நடிகைகளைத்தான் அவர்களுக்கு பிடிக்கும். ஆனால் எனக்கு அது பிடிக்காது. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முயற்சி செய்தேன். ஆனால் நானும் சில தவறுகளை செய்திருக்கிறேன். சில கதாபாத்திரங்கள் நல்லபடியாக அமைந்தன; சில கதாபாத்திரங்கள் அமையவில்லை. இருந்தாலும் எனது திரைப்பயணம் சிறப்பானதாகவே இருந்தது" என்றார். அவரது இந்த தைரியமான பேட்டி பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X