அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யாததால் படவாய்ப்பை இழந்தேன்.. மல்லிகா ஷெராவத் பகீர் தகவல்!

மும்பை : அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யாததால் படவாய்ப்பை இழந்ததாக பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளது பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மாடல் அழகியும், நடிகையுமான மல்லிகா ஷெராவத் குவாஷிஷ் என்ற இந்தி படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

மேலும், தி மித், ஹிஸ்ஸ், பாலிடிக்ஸ் ஆஃப் லவ், டைம் ரைடர்ஸ் போன்ற சர்வதேச திட்டங்களில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத். இந்தி, ஆங்கிலம், கன்னடா மற்றும் சீன மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, மல்லிகா ஷெராவத் நடிப்பில் வெளியான ''ஆர்கே' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகை மல்லிகா ஷெராவத்

நடிகை மல்லிகா ஷெராவத்

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மல்லிகா ஷெராவத். இவர் தமிழிலும் கமல்ஹாசனின் தசாவதாரம் படம் மூலம் நடிகையாக எண்ட்ரியானார். அப்படத்தில் வில்லியாக நடித்திருந்த மல்லிகாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இதையடுத்து,பல ஆண்டுகள் கழித்து 2011-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கலாசலா கலாகலா என்கிற ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார்.

அட்ஜெஸ்ட்மெண்ட்

அட்ஜெஸ்ட்மெண்ட்

அண்மையில் அளித்துள்ள பேட்டியில் மல்லிகா, பகீர் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில், நான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யாததால் பல முன்னணி நடிகர்கள் பலர் என்னுடன் நடிக்க மறுத்துவிட்டார். இதனால், பல தயாரிப்பாளர்கள் படங்களில் என்னை ஒப்பந்தம் செய்யவே முன்வரவில்லை. பல ஹீரோக்களுக்கு அவருடன் இணைந்து நடிக்கும் ஹீரோயின்கள் அவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு அட்ஜெஸ்ட் பண்ணும் நடிகைகளை தான் அவர்களுக்கு பிடிக்கும். எனக்கு அது பிடிக்காது என்றார்.

ஹீரோ சொல்வதை கேட்க வேண்டும்

ஹீரோ சொல்வதை கேட்க வேண்டும்

இங்கே உட்காரு, அங்கே நில், எழுந்து வா என ஹீரோக்கள் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். காலை 3 மணிக்கு ஹீரோ போன் செய்து என் வீட்டிற்கு வா என்றால் உடனே செல்ல வேண்டும். அதை செய்தால்தான் படம் வாய்ப்பு கிடைக்கும். ஹீரோ அழைத்ததும் செல்லாவிட்டால் படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று பகீர் தகவலை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.

நல்ல கதாபாத்திரங்களில் நடித்தேன்

நல்ல கதாபாத்திரங்களில் நடித்தேன்

மேலும், இந்தி படங்களில் நடிப்பதை ஏன் குறைத்துக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த மல்லிகா, நான் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முயற்சி செய்தேன். அனைவரையும் போன்று நானும் சில தவறுகள் செய்திருக்கிறேன். சில கதாபாத்திரங்கள் நல்லதாக இருந்தன, சில கதாபாத்திரம் சிறப்பானதாக இல்லை. ஆனால் என் திரைப்பயணம் சிறப்பானது என்றார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் மல்லிகா ஷெராவத் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X