8 மணி நேரம் வேலை.. அந்த நடிகை கேட்டதில் தவறில்லை.. மணிரத்னம் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில்'ஸ்பிரிட்' படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தமான நிலையில், திடீரென அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக திருப்தி டிம்ரி நாயகியாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான பிரச்சனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த மணிரத்னம், தீபிகாவிற்கு ஆதரவாக பேசி உள்ளார்.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா தற்போது 'ஸ்பிரிட்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், இப்படத்தில் இருந்து தீபிகா படுகோனே விலகி விட்டார். அவர் மீது இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அதாவது, தான் குழுந்தைக்கு தாயாகி இருப்பதால், 8 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவேன் என்றார். மேலும், படத்தின் லாபத்தில் பங்கு கேட்டார். இது ஒத்துவராததால் படத்தில் இருந்து தீபிகா விலக்கப்பட்டார் என கூறியிருந்தார்.

மணிரத்னம்: மும்பையில் நடந்த தக் லைஃப் திரைப்படத்தின் ப்ரோமோஷனில், இந்த பிரச்சனை குறித்து மணிரத்னத்திடம் செய்தியாளர் கேள்வி எழுப்பி இருந்தார், அதற்கு பதில் அளித்த மணிரத்னம், தீபிகா படுகோனே கேட்பது நியாயமான கோரிக்கை என்றே நான் நினைக்கிறேன். இந்த கோரிக்கை இயக்குநருக்கு பொருந்தவில்லை என்றால், அவர் அதையே தொடரட்டும். ஆனால், தீபிகாவின் கோரிக்கை மதிக்கப்பட வேண்டும். அவர் ஒரு இளம் தாய், தனது குழந்தையைப் பராமரிக்க வேண்டும் என்பதற்காக 8 மணி நேர வேலை என்பதை முன்வைத்துள்ளார். அது நியாயமானது. அதைக் கேட்கும் இடத்தில் அவர் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு திரைப்பட இயக்குநராக, இதனை கருத்தில் கொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன். அவர் கேட்பது நியாயமற்ற விஷயம் அல்ல. அது முழுமையான அடிப்படை தேவை. அதுதான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அதை ஒப்புக்கொண்டு அதனை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என பார்க்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு தவையானதை கேட்டு பெறுவது நல்லது என்று நான் நினைக்கிறேன் என மனிரத்னம் தீபிகா படுகோனேவுக்கு ஆதரவாக பேசி உள்ளார்.
தக் லைஃப்: பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி இருக்கும் 'தக் லைஃப்' திரைப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், ஐஸ்வர்யா லெட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் திரைப்படத்தின் பாடல் இணையத்தில் டிரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி மாஸ் காட்டி வருகிறது. இப்படத்திற்கு நடிகர் சிம்புவிற்கு, ரூ. 40 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சிம்புவின் திரைப்பயணத்தில் இது தான் அதிகமான சம்பளம் என கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்பு கமலுக்கு நிகராக நடித்திருப்பதால், இந்த சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல த்ரிஷாவிற்கு இப்படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











