தொடர்ந்து சிக்கும் பாலிவுட் நடிகைகள்.. பண மோசடி வழக்கில் இன்னொரு பிரபல நடிகையும் மாட்டிக்கிட்டாரு!

மும்பை: ஒரு பக்கம் போதைப் பொருள் விவகாரம் இன்னொரு பக்கம் பணமோசடி விவகாரம் என தொடர்ந்து பல பாலிவுட் பிரபலங்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர்.

பாலிவுட் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டும் வருவது ரசிகர்கள் மத்தியில் பாலிவுட் குறித்த மிகவும் மோசமான மனநிலை உருவாக காரணமாகி உள்ளது.

பண மோசடி புகார் தொடர்பான விசாரணைக்கு பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி ஆஜராக அமலாக்கத் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஜாக்குலினிடம் விசாரணை

ஜாக்குலினிடம் விசாரணை

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் அமலாக்கத்துறையினர் 200 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 4 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜாக்குலினை தொடர்ந்து இன்னொரு பிரபல பாலிவுட் நடிகையும் இதே விவகாரத்தில் சிக்கி உள்ளார்.

மோசடி மன்னன்

மோசடி மன்னன்

பண மோசடி விவகாரம் மற்றும் குற்ற வழக்குகளில் 17 வயதில் இருந்தே மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஈடுபட்டு வருவதாகவும், சென்னையில் அவருக்கு சொந்தமான கடற்கரை பங்களா, 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் மற்றும் 82 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற்ற அதிரடி சோதனையின் போது கைப்பற்றப்பட்டது. சுகேஷ் சந்திராவுடன் தொடர்பில் இருந்த பாலிவுட் நடிகைகளிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி வருகின்றனர்.

நோரா ஃபதேஹி

நோரா ஃபதேஹி

பிரபல பாலிவுட் நடிகையான நோரா ஃபதேஹி இந்த விவகாரத்தில் தற்போது சிக்கி உள்ளார். ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை தொடர்ந்து நோராவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த அவருக்கு அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது பாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி உள்ளது.

கிளாமர் குயின்

கிளாமர் குயின்

சத்யமேவ ஜயதே படத்தில் இடம்பெற்ற தில்பார் ஐட்டம் பாடல் மூலம் பிரபலமானவர் நோரா ஃபதேஹி. ராக்கி ஹேண்ட்ஸம், ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி, ஸ்த்ரீ, மர்ஜவான் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி நடனமாடி பாலிவுட்டின் கிளாமர் குயினாக கலக்கி வருபவர் நோரா ஃபதேஹி.

பிக் பாஸ் போட்டியாளர்

பிக் பாஸ் போட்டியாளர்

இந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9ல் போட்டியாளராக கலந்து கொண்ட நோரா ஃபதேஹி ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் மற்றும் நடிகர்கள் குற்ற வழக்குகளில் கைதாவதும் விசாரிக்கப்படுவதும் ரசிகர்கள் மத்தியில் பாலிவுட் மீதே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X