2021ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள்.. 2ம் இடத்தில் ஆர்யான் கான்.. ராஜ் குந்த்ராவும் இருக்காரு!

மும்பை: ஆண்டுதோறும் கூகுளில் அந்த ஆண்டு முழுவதும் அதிக நபர்களால் தேடப்பட்ட நபர் குறித்த பட்டியல் வெளியாகும்.

இந்த ஆண்டு அந்த பட்டியலில் முதல் இடத்தை ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தை நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் பிடித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்

அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்

2021ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட சினிமா துறையை சார்ந்த பிரபலங்கள் பட்டியல் குறித்து இங்கே பார்ப்போம். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் சினிமாவில் நுழையவில்லை என்றாலும் போதைப் பொருளில் சிக்கிய அவர் அதிகளவில் நெட்டிசன்களால் தேடப்பட்டுள்ளார். மேலும், சினிமா துறையை சார்ந்த பிரபலங்கள் யார் யார் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறித்து இங்கெ காண்போம்.

ஷாருக்கான் மகன்

ஷாருக்கான் மகன்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானின் செல்ல மகன் ஆர்யான் கான் போதைப் பொருள் விருந்தில் கலந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு போதைப் பொருள் தடுப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது. மகனை ஜாமினில் மீட்க நடிகர் ஷாருக்கானும் பெரும் போராட்டம் நடத்தியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை ஆர்யான் கான் பிடித்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம் சித்தார்த் சுக்லா மறைவு இந்த ஆண்டு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அவர் அதிகமாக தேடப்படவில்லை அவரது காதலியும் பிக் பாஸ் பிரபலமுமான நடிகை ஷெனாஸ் கில் தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார்.

ஷில்பா ஷெட்டி கணவர்

ஷில்பா ஷெட்டி கணவர்

ஷெனாஸ் கில்லுக்கு அடுத்த இடமான 4வது இடத்தில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளது நடிகை ஷில்ப ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தான். ஆபாச படங்கள் எடுத்து வியாபாரம் செய்த வழக்கில் வசமாக சிக்கிய ராஜ் குந்த்ரா பற்றி அதிகமான நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்துள்ளனர்.

Recommended Video

Google ல sona னு Type பண்ணா இப்டிதான் வருது | Actress Sona Chat | Filmibeat Tamil
கத்ரீனா கணவர்

கத்ரீனா கணவர்

நடிகை கத்ரீனா கைஃபை இன்று திருமணம் செய்யவுள்ள பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல் இந்த பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார். கத்ரீனா கைஃபை மணமுடிக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாருப்பா என்றே பாலிவுட் ரசிகர்கள் தேடி இருப்பார்களோ என்னவோ? இன்று கோலாகலமாக விக்கி - கத்ரீனா திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X