விவாகரத்து ஒரு பக்கம்.. மகனுக்கு 39 அம்மாவுக்கு 40 வயசு.. என்னம்மா மெளனி ராய் இது?
மும்பை: நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வரை கவர்ந்தவர் பிரபல பாலிவுட் நடிகை மெளனி ராய். சமீபத்தில், அவருக்கும் அவர் கணவர் துபாயை சேர்ந்த சுராஜ் நம்பியார் விவாகரத்து பஞ்சாயத்து வெடித்து பெரிய சர்ச்சையை கிளப்பியது.
டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள Hai Jawani Toh Ishq Hona Hai திரைப்படத்தில் மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே இருவரும் படு கவர்ச்சியாக நடித்தது தான் பரபரப்பை பற்ற வைத்து வந்த நிலையில், தற்போது வருண் தவானுக்கு அம்மாவாக மெளனி ராய் நடித்துள்ளதாக வெளியான தகவல் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

துரந்தர் படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்தது பெரும் பஞ்சாயத்தை கிளப்பிய நிலையில், தற்போது வருண் தவானுக்கு அம்மாவாக மெளனி ராயா என பாலிவுட்டே ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளது.
மகனுக்கு 39 அம்மாவுக்கு 40 வயசு: வருண் தவானுக்கு அம்மாவாக Hai Jawani Toh Ishq Hona Hai திரைப்படத்தில் மெளனி ராய் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு 39 வயது ஆகும் நிலையில், மெளனி ராய்க்கு 40 வயது தான் ஆகிறதாம். இந்த தகவல் தற்போது பாலிவுட்டில் தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே மெளனி ராய் விவாகரத்து மேட்டரில் ஹாட் டாப்பிக்காக போய்க் கொண்டிருக்கும் நிலையில், இந்த பஞ்சாயத்து தற்போது பற்றிக் கொண்டிருக்கிறது. அக்கா தம்பியாக நடிக்க வேண்டியவர்கள் எல்லாம் அம்மா - மகனாக நடிக்கிறார்களே என கலாய்த்து வருகின்றனர்.
பாலய்யா, ஹனி ரோஸ் தெரியுமா?: கோலிவுட்டில் ரஜினிகாந்த் உடன் வயது கம்மியானவர்கள் அவருக்கு அம்மாவாக நடித்துள்ளனர். பாலய்யாவுக்கு ஹீரோயினாகவும் அம்மாவாகவும் ஹனி ரோஸ் எல்லாம் நடித்துள்ளார். ஒரு வயது தானே வித்தியாசம் இதெல்லாம் பெரிய மேட்டராக சொல்லிக் கொண்டு இருக்கிறீர்களே என்றும் நெட்டிசன்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
கண்ணை மறைத்த 2 ஹீரோயின்கள்: பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் படம் முழுக்க தாராளமாக கவர்ச்சி தரிசனம் காட்டியுள்ள நிலையில், அம்மாவாக நடித்துள்ள மெளனி ராய் எல்லாம் கண்ணுக்கே தெரியமாட்டார் என்றும் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்துக்கு ஏகப்பட்ட கிரேஸ் இப்போதே உள்ளது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications