twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீதிமன்றத்தையே குறை சொல்ல ஆரம்பித்த கங்கனா ரனாவத்.. ஆனால், அவங்க நினைச்சது பலிக்காம போயிடுச்சே!

    |

    மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றச் சொல்லி கங்கனா அளித்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை என தள்ளுபடி செய்து விட்டனர்.

    சர்ச்சை கருத்துக்களை கூறி அடிக்கடி பரபரப்பை கிளப்பி வரும் நடிகை கங்கனா ரனாவத் நடிகர்கள், பாலிவுட்டை தாண்டி இப்போ மும்பை அந்தேரியில் உள்ள நீதிமன்றத்தையே குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்.

    ஷிவானியின் கிளாமரை பார்த்து கடுப்பாகும் ரசிகர்கள்..இதுமட்டும் தப்பா தெரில.அதுமட்டும் தப்பா?ஷிவானியின் கிளாமரை பார்த்து கடுப்பாகும் ரசிகர்கள்..இதுமட்டும் தப்பா தெரில.அதுமட்டும் தப்பா?

    அந்த நீதிமன்றம் தன்னை மிரட்டுவது போல செயல்படுவதாகவும் அதனால் வழக்கை வேறு ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கடந்த மாதம் கங்கனா ரனாவத் மனு அளித்து இருந்தார்.

    சர்ச்சை தலைவி

    சர்ச்சை தலைவி

    கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான தலைவி திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்ட காரணத்திற்காக நடிகை கங்கனா ரனாவத்தின் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது. ஆனாலும், மனம் தளராத கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் அமீர்கான் குறித்தும் ஹிரித்திக் ரோஷன் குறித்தும் சமீபத்தில் சர்ச்சை கருத்துக்களை பகிரங்கமாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

    அவதூறு வழக்கு

    அவதூறு வழக்கு

    கடந்த ஆண்டு நடிகை கங்கனா ரனாவத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பற்றி அவதூறான சில கருத்துக்களை வெளியிட அதனை எதிர்த்து பாடகர் ஜாவேத் அக்தர் மும்பை அந்தேரியில் உள்ள நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    நீதிமன்றத்தின் மீதே பழி

    நீதிமன்றத்தின் மீதே பழி

    மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தன்னை அச்சுறுத்தும் வகையில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக சொல்கிறது என கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டிடம் புகார் மனு அளித்திருந்தார். வேறு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

    மாற்ற முடியாது

    மாற்ற முடியாது

    தவறான தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. சரியான நியாயம் கிடைக்கவில்லை போன்ற காரணங்களுக்காக வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி முறையிட்டால் அது குறித்து பரிசீலனை செய்யலாம். ஆனால், நீதிமன்றம் ஒரு சார்பாக செயல்படுகிறது. அதனால் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என நீங்கள் சொல்வது ஏற்புடையதாக அல்ல எனக் கூறிய நீதிபதி எஸ்.டி. தாண்டே அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    English summary
    Bollywood actor Kangana Ranaut wishes to transfer her case from one court to another and legally filed a plea last month, saying that she had "lost faith" in the Andheri metropolitan magistrate's court as it indirectly "threatened" her. But her all effort ruins after the latest judgment came against her choice.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X