ஷாருக்கான் மகனுடன் கைதான… மாடல் அழகி யார்?... அலசி ஆராயும் மும்பை போலீஸ் !
மும்பை : மும்பை கப்பலில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், முன்முன் தமேச்சா மற்றும் அர்பாஸ் மெர்ச்சன்ட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்ட முன்முன் தமேச்சா யார் அவரின் பின்னணி என்ன என்பதை மும்பை போலீசார் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

நடுக்கடலில் விருந்து
மும்பையில் நடுக்கடலில் நேற்று நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர். அங்கு போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

போதை பொருள்
இதுகுறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸார் பயணிகள் போல அதே கப்பலில் ஏறினர். மும்பையில் இருந்து கிளம்பி கப்பல் கடலுக்குள் பயணித்த போது அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கொகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

யார் இந்த முன்முன் தமேச்சா
இந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அர்பாஸ் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோர் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் , போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆரியன் கானுடன் கைது செய்பட்ட முன்முன் தமேச்சா யார் என்பதை போலீசார் அலசி ஆராயத் தொடங்கி உள்ளனர்.

முன்முன் தமேச்சா
அதில், முன்முன் தமேச்சா வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாடல் என்றும், மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் வசித்து வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் அவருடன் யாரும் வசிக்கவில்லை என்பதும், முன்முனின் தாய் கடந்த ஆண்டு இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. முன்முனின் சமூகவலை பக்கத்தை ஆய்வு செய்த போலீசார், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10.3k பாலோவர்ஸ் வைத்திருக்கிறார் என்றும், எந்த பிரபலங்களும் அவரைப் பின்தொடரவில்லை என்றாலும், அக்ஷய் குமார், விக்கி கவுசல் மற்றும் பலரைப் இவர் பின் தொடர்கிறார்.

4 ஆண்டுகளாக போதை பழக்கம்
கோர்டெலியா குரூஸின் பேரரசி கப்பலில் இருந்த 8 பேரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது ஆர்யன் கான் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் , அவருக்கு 4 ஆண்டுகளாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது, ஆரியன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











