மறைந்த நடிகர் ரிஷி கபூரின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதி மறுத்த மும்பை போலீஸ்.. காரணம் என்ன?

மும்பை: மறைந்த நடிகர் ரிஷி கபூரின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என அவரது குடும்பாத்தாருக்கு மும்பை போலீஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

Rishi Kapoor demise shook the nation and Bollywood

பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் இன்று காலை மும்பை ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடி வந்தார் ரிஷி கபூர்.

2018ஆம் ஆண்டு ரிஷி கபூருக்கு சிகிச்சை அளிப்பதற்காக நியூயார்க் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் அவரது மனைவியான நீத்து சிங்.

இன்று மரணம்

இன்று மரணம்

கிட்டத்தட்ட ஓராண்டு வரை அங்கு தங்கியிருந்து புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார் ரிஷி கபூர். இந்நிலையில் நேற்று மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிகாரப்பூர்வ அறிக்கை

அதிகாரப்பூர்வ அறிக்கை

அவர் உயிரிழந்த தகவலை நடிகர் அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் முதல் ஆளாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ரிஷி கபூரின் குடும்பத்தினர் காலை 8.45 அவர் உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டனர்.

உடலை கொண்டு செல்லக்கூடாது

உடலை கொண்டு செல்லக்கூடாது

இந்நிலையில் ரிஷி கபூரின் உடலை குடும்பத்தினர் அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல மும்பை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அவரது உடலை மருத்துவமனையில் இருந்து நேரடியாக தகன கூடத்திற்கு கொண்டு சென்று இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கு காரணம்

ஊரடங்கு காரணம்

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும் கூட்டம் சேராமல் இருக்க வேண்டும் என்பதற்காக போலீசார் அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதாக தெரிகிறது.

பிரபலங்கள் அஞ்சலி

பிரபலங்கள் அஞ்சலி

இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அருகில் உள்ள மரைன் லைன்ஸ் சந்தன்வாடியில் நடிகர் ரிஷி கபூரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள ரிஷி கபூரின் உடலுக்கு ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X