'அதையெல்லாம் நம்பாதீங்க..' அந்த பிரபலம் பற்றி திடீரென பரவிய வதந்தி.. வேகமாக விளக்கம் அளித்த நடிகர்!

By

மும்பை: பிரபல நடிகர் பற்றி திடீரென பரவிய வதந்தியை, அவர் மறுத்துள்ளார்.

சினிமா நடிகர், நடிகைகள் பற்றி அவ்வவ்போது வதந்திகள் வருவதும் பிறகு அவர்கள் மறுப்பதும் உண்டு. மூத்த நடிகர்கள் பற்றி சிலர் வேண்டுமென்றே சிலர் வதந்தி கிளப்புவார்கள்.

பின்னர் அவர்கள் மறுப்புத் தெரிவிப்பது வழக்கம். அதே போல இப்போது பிரபல பாலிவுட் நடிகர் பற்றி வதந்தி பரப்பியுள்ளனர்.

த வெட்னஸ்டே

த வெட்னஸ்டே

பிரபல இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா. ஹம் பாஞ்ச், மசூம், கர்மா, த வெட்னஸ்டே உட்பட நூற்றுக்கும் அதிகமான இந்திப் படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் கமல்ஹாசனின் ஹே ராம் படத்திலும் நடித்திருதார். இந்தி மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

பல்வேறு விருதுகள்

பல்வேறு விருதுகள்

சிறந்த நடிப்புக்காக மூன்று தேசிய விருதுகள் உட்பட, பல்வேறு விருதுகளை பெற்றுள்ள நஸ்ருதின் ஷா, மத்திய அரசின் பத்மஶ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். லாக்டவுன் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் இவர். இந்நிலையில் பாலிவுட் நடிகர்கள் இர்ஃபான் கான், ரிஷி கபூர் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தீவிரச் சிகிச்சை

தீவிரச் சிகிச்சை

இதனால் இந்தி சினிமா நடிகர்களும் ரசிகர்களும் சோகத்தில் இருக்கும் நிலையில், நடிகர் நஸ்ருதீன் ஷாவும் உடல் நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும் செய்திகள் வெளியாயின. இதனால் இந்தி திரையுலகம் மீண்டும் பரபரப்பானது.

நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம்

இந்நிலையில், நான் உடல் நலத்துடன் இருக்கிறேன். என்னைப் பற்றி வரும் வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம். என் உடல்நலம் பற்றி விசாரித்த அனைவருக்கும் நன்றி. நான் லாக்டவுனை கடைபிடித்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 70 வயதான நஸ்ருதின் ஷாவின் மகன் விவான் ஷாவும் இந்த வதந்தியை மறுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X