தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்த பிரபல நடிகை.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை நேஹா தூபியா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.
மின்னரம் எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேஹா தூபியா தெலுங்கு, இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு நடிகர் அங்கத் பேடி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

நேஹா தூபியா
41 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை நேஹா தூபியா கொச்சினில் சீக்கிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகாமான இவர் டிவி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட வெப்சீரிஸ்களிலும் நேஹா தூபியா நடித்துள்ளார்.

திருமண வாழ்க்கை
2018ம் ஆண்டு நடிகர் அங்கத் பேடி என்பவரை திருமணம் செய்து கொண்ட நேஹா தூபியாவுக்கு மெஹர் எனும் பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்த போதே தாய்ப்பால் கொடுப்பது குறித்தான பிரச்சாரத்தை தொடங்கிய நேஹா தூபியா தற்போது மீண்டும் அதனை நினைவு படுத்தி உள்ளார்.

குழந்தைக்கு தாய்ப்பால்
சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை நேஹா தூபியா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்து "Freedom to Feed" எனும் கேப்ஷனையும் கொடுத்து வைரலாக்கி உள்ளார்.

பெண்கள் கஷ்டப்படுறாங்க
ஏற்கனவே பேட்டி ஒன்றில் இது தொடர்பாக பேசியிருந்த நடிகை நேஹா தூபியா பல இடங்களில் தாய்ப்பால் கொடுக்க பெண்கள் மூலை முடுக்குகளை தேடுவதை பார்த்து இருக்கிறேன். ஒரு முறை விமானத்தில் செல்லும் போது டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு ரொம்பவும் சிரமமான சூழலில் ஒரு பெண் தனது குழந்தைக்கு பால் கொடுத்தார்.

குழந்தைக்கான உணவு
தாய்ப்பால் கொடுக்க இடங்களை தேடி ஓடும் நெருக்கடிக்கு பெண்களை தள்ளக் கூடாது. மேலும், நமது குழந்தைக்கான உணவை கொடுக்கும் போது எந்தவித கூச்சமும் இல்லாமல் தைரியமாக வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டே பாலூட்டும் அளவுக்கு பெண்களுக்கான சுதந்திரம் கிடைக்க வேண்டும் எனக் கூறியிருந்த நிலையில், அதனை மீண்டும் உறுதி படுத்தும் விதமாகவே இப்படியொரு போஸ்ட்டை அவர் ஷேர் செய்துள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











