கம்பேக் கொடுப்பாருன்னு பார்த்தா.. இதுவும் காப்பியால்ல இருக்கு.. அமீர்கானை ட்ரோல் செய்யும் ஃபேன்ஸ்!
மும்பை: ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர்கான், ஜெனிலியா நடிப்பில் உருவாகியுள்ள 'Sitaare Zameen Par' படத்தின் டீசர் நேற்று வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அதே சமயம் சித்தாரே ஜமீன் பர் எந்த ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டது என்பதையும் நெட்டிசன்கள் நோண்டி எடுத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
பாலிவுட்டில் மட்டுமின்றி இந்தியாவிலேயே இதுவரை 2000 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை வைத்திருப்பது யாரென்றால் அது நம்ம அமீர்கான் மட்டும்தான். தங்கல் திரைப்படம் சீனாவில் வெளியாகி அந்தளவுக்கு பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் அமீர்கானின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1870 கோடி வசூல் உடன் ஓய்ந்துவிட்டது. ஆனால், இந்த படம் இந்தியா மற்றும் ஓவர்சீஸிலேயே அதிக வசூல் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அமீர்கானுடன் ஜெனிலியா: நடிகை ஜெனிலியாவை சமீபத்தில் ரசிகர்கள் சச்சின் ரீ ரிலீஸ் படத்தின் மூலம் பார்த்து திரையரங்குகளில் கொண்டாடினர். பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஜெனிலியா இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். சில படங்களில் கேமியோ ரோலில் நடித்து வந்த ஜெனிலியா தற்போது அமீர்கான் உடன் இணைந்து சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடித்துள்ளார்.
தாரே ஜமின் பர்: கடந்த 2007ம் ஆண்டு அமீர்கான் இயக்கி நடித்த 'தாரே ஜமின் பர்' திரைப்படம் 12 கோடி பட்ஜெட்டில் உருவாகி 97 கோடி வசூல் சாதனையை அப்பவே புரிந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. பாலிவுட்டில் செம ஃபீல் குட் படமாக வெளியான அந்த படத்தை போலவே தற்போது சித்தாரே ஜமின் பர் உருவாகி இருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான பசங்க 2 படம் தாரே ஜமீன் பர் படத்தில் இருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டதாகவே கூறப்பட்டது.
காப்பியா? ரீமேக்கா?: கடைசியாக அமீர்கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ஹாலிவுட்டில் வெளியாகி ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் அந்த படம். லால் சிங் சத்தா தோல்வியை தொடர்ந்து சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் ஓய்வில் இருந்து வருகிறார் அமீர்கான். இந்நிலையில், அவருடைய கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட சித்தாரே ஜமின் பர் திரைப்படம் ஸ்பானிஷ் படமான சாம்பியன்ஸ் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ தழுவல் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
கம்பேக் கொடுப்பாரா?: 2018ம் ஆண்டு வெளியான சாம்பியன்ஸ் படத்தின் காட்சிகளை அப்படியே அச்சு பிசகாமல் அமீர்கான் ரீமேக் செய்து உருவாக்கியுள்ளார் என்றும் இந்த படம் பாலிவுட் ரசிகர்களுக்கோ பான் இந்தியா ரசிகர்களுக்கோ தீனியாக அமையுமா என்பது சந்தேகம் தான் என்கின்ற்னார். ஆனால், டாப் நடிகரான அமீர்கான் இதுபோன்ற ஃபீல் குட் படங்களில் நடிப்பது பாராட்ட வேண்டிய விஷயம் என்கின்றனர். ரஜினிகாந்தின் கூலி படத்திலும் அமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். சித்தாரே ஜமின் பர் படம் இந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











