Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தாய்மையின் சுகம் காசு கொடுத்தால் கிடைக்காது .. பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக குவியும் ட்ரோல்கள்!
மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்ற மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ட்விட்டரில் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல்களும் அதே சமயத்தில் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதே போல வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற நிலையில், தற்போது பிரியங்கா சோப்ராவும் அதே ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார்.
அடேங்கப்பா...சூறாவளில
இருந்து
மீண்டு
வந்த
எஃபெக்ட்...ரசிகர்களை
மிரள
வைத்த
அகண்டா

10 வயது சின்ன பையன்
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற மெட்காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் நிக் ஜோனஸை சந்தித்து நட்பு கொண்ட நிலையில், இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். கடந்த 2018ம் ஆண்டு கோலாகலமாக இருவரது திருமணமும் நடைபெற்றது. நடிகை பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர் நிக் ஜோனஸ் என்பது அப்போது மிகப்பெரிய ஷாக்கிங் செய்தியாக இருந்தது.

விவாகரத்து வதந்தி
நடிகை சமந்தா அக்கினேனி பெயரை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கிய நிலையில், விவாகரத்து அறிவிப்பை இருவரும் வெளியிட்டனர். அதே போல நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த தனது கணவர் ஜோனஸ் பெயரை நீக்கியதும் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்களா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், உடனடியாக இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.

வாடகைத்தாய் மூலமாக
நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இருவரும் வாடகைத்தாய் மூலமாக பெண் குழந்தை ஒன்றை வரவேற்க காத்திருப்பதாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட போஸ்ட் உலக ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் பிரியங்கா சோப்ராவை வாழ்த்தி வருகின்றனர்.

பிரைவசியை மதியுங்க
அதே நேரத்தில் எங்களது இந்த முடிவு மற்றும் எங்களுக்கான பிரைவசியை மதியுங்க என பிரியங்கா கோரிக்கை ஒன்றையும் அந்த போஸ்ட்டில் வைத்திருந்தார். இந்நிலையில், அதையும் மீறி ஏகப்பட்ட நெட்டிசன்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது இதுபோன்ற பிரபலங்களுக்கு சாதாரண விஷயம் ஆகி விட்டது என ஏகப்பட்ட ட்ரோல்களை போட்டு #surrogacy ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இன்னொரு பெண்ணை கொடுமைப்படுத்தி
நடிகைகள் மற்றும் பணம் படைத்த பெண்கள் தங்கள் அழகு கெட்டுப் போய்விடும் என்பதற்காக இன்னொரு பெண்ணுக்கு அந்த கர்ப்பகால வலியை கொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும் என்றும் காசு கொடுத்து தாய்மையை யாரும் விலைக்கு வாங்க கூடாது என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

தாய்மையின் சுகம்
பத்து மாதங்கள் அந்த கருவை சுமந்து பிரசவ வலியை அனுபவித்து குழந்தையை இயற்கை முறையில் பெற்றெடுத்தால் தான் தாய்மையின் சுகம் தெரியும் என்றும் இதுபோன்ற வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றால் தாய்மை பாசம் கிடைக்காது என்றும் பணக்காரர்கள் இதை எப்போது புரிந்து கொள்ளப் போகின்றனர் என பிரியங்கா சோப்ராவை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

பிரியங்காவுக்கு பிரச்சனை இல்லை
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சனை இருப்பதால் தான் இப்படியொரு முடிவை எடுத்துள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் உடல் ரீதியாக எந்தவொரு பிரச்சனையும் இல்லை என ரிப்போர்ட்கள் வெளியாகி உள்ளன.