அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இளம் வாரிசு நடிகை.. அதுக்காகதானே? கதறவிடும் நெட்டிசன்ஸ்!

மும்பை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய இளம் வாரிசு நடிகையை நெட்டிசன்கள் மரணமாய் ட்ரோல் செய்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரை நட்சத்திரங்களும் அமித் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.

அமித் ஷாவுக்கு ஐஸ்

அமித் ஷாவுக்கு ஐஸ்

அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் இளம் நடிகையான சாரா அலிகானும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தற்போது பாலிவுட் போதை பொருள் தடுப்பு பிரிவினரின் ரேடாரில் சிக்கியிருப்பதால் சாரா அலிகான், அமித் ஷாவுக்கு ஐஸ் வைப்பதாக கூறியுள்ளனர்.

போதை பொருள் தடுப்பு பிரிவு ரெய்டு

போதை பொருள் தடுப்பு பிரிவு ரெய்டு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதாக போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆர்யன் கான் ஆர்த்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிக்கும் பிரபலங்கள்

சிக்கும் பிரபலங்கள்

இந்நிலையில் இளம் நடிகையான அனன்யா பாண்டேவும் ஆர்யன் கானும் கஞ்சா குறித்து வாட்ஸ் அப்பில் சாட் செய்ததன் அடிப்படையில் அவரிடம் மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு நடுவில் சாரா அலிகான் அமித் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காப்பாற்றிக் கொள்ள அமைச்சருக்கு வாழ்த்து

காப்பாற்றிக் கொள்ள அமைச்சருக்கு வாழ்த்து

இதனை பார்த்த நெட்டிசன்கள் அமைச்சரின் குட் புக்கில் இடம் பிடித்துவிட்டால் போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளலாம் நடிகை சாரா அலிகான் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளதாக கிண்டலடித்து வருகின்றனர்.

Recommended Video

சினிமாவில் பாடல்களின் முக்கியத்துவம் குறைகிறது | MUSIC DIRECTOR GHIBRAN CHAT | FILMIBEAT TAMIL
ட்ரொல் செய்யும் நெட்டிசன்ஸ்

ட்ரொல் செய்யும் நெட்டிசன்ஸ்

சாரா அலிகானின் இந்த பதிவை பார்த்த ஒரு நெட்டிசன், இனிமேல் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ரெய்டு நடத்த மாட்டார்கள்.. நீங்கள் இப்போது சேஃப் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் சாரா அலிகான் தன்னை பாதுகாப்பாக காட்டிக் கொள்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இதுபோல் பல நெட்டிசன்கள் சாரா அலிகானை ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X