மெக்காவில் கதறி அழுத நடிகை.. புனித தலத்தில் கடவுளின் முன் நாடகமா.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: மெக்காவிற்கு புனித யாத்திரை சென்று இருக்கும் ராக்கி சாவந்த் தன் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக கதறி அழுதபடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் ரித்தேஷை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே அவரைவிட்டு பிரிந்தார். பின்னர் ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் மும்பை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் ஆதில் கானை கைது செய்தனர்.
கணவர் மீது புகார்: நடிகை ராக்கி சாவந்த் கொடுத்த புகாரின் காரணமாக, மைசூர் சிறையில் ஆறு மாதங்களுக்கு மேலாக இருந்த ஆதில் கான், சில நாட்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதையடுத்து,செய்தியாளர்களிடம் பேசிய ஆதில், ராக்கி சாவந்த் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை கூறினார்.
நிர்வாண வீடியோ: இதில், ராக்கி சாவந்த் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக என்னிடம் கூறி என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் முதல் கணவருடன் ரகசிய உறவில் இருந்தார் என்றார். மேலும், நான் அவரை அடித்தது இல்லை, அவர் தான் என்னை பல முறை தாக்கி உள்ளார். மேலும், எனக்கு போதை மருந்து கொடுத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினார் என்று ராக் சாவந்த் மீது பல புகார்களை கூறினார்.
பலாத்காரம் செய்தார்: இதற்கு, ஊடகத்தின் முன் பதில் அளித்த ராக்கி சாவந்த், ஆதில், நான் குளியலறையில் இருந்தபோது என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து, அந்த வீடியோவை ரூ.47 லட்சத்திற்கு விற்றுவிட்டார். என் முழு நிர்வாண கோலத்தையும் வீடியோ எடுத்து உள்ளார். மேலும், மைசூரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் என்னை அடைத்து வைத்து ஆதில் கான் துரானி பலாத்காரம் செய்தார். என் முகத்தை எப்படி உலகுக்குக் காட்டுவது? என்று பேசி இருந்தார்.
மெக்காவில் கதறி அழுத: தற்போது,மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு சென்ற ராக்கி சாவந்த், அங்கிருந்து அடுத்தடுத்து வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்போது, இவர் காபா முன் நின்று கொண்டு, நான் பாலிவுட்டில் டாப் நடிகையாக நினைத்தேன், ஆதில்... ஏன் இப்படி பண்ண என்று கதறி கதறி அழுகிறார். இதைப்பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ், வீடியோ எடுத்து பதிவிடத்தான் புனித யாத்திரை தலத்திற்கு சென்றீர்களா.. மெக்காவிற்கு சென்று விட்டு கடவுளின் முன் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடலாமா, உங்களுக்கு முதலில் விசா கொடுத்தது யார் என்று ராக்கி சாவந்த்தை கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











