10 ஆண்டுகள் காதலித்த நடிகையை இம்மாதம் கரம் பிடிக்கிறார் பிரபல பாலிவுட் நடிகர்.. ரசிகர்கள் குஷி!

மும்பை: இந்த ஆண்டு இறுதியில் ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

நடிகை கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல் திருமணம், ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம் என வரிசையாக பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணங்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இம்மாதமே பிரபல பாலிவுட் நடிகரான ராஜ்குமார் ராவின் திருமணம் எங்கே எப்போது நடைபெற போகிறது என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

பாலிவுட்டில் விசேஷமுங்கோ

பாலிவுட்டில் விசேஷமுங்கோ

தற்கொலை, போதை பொருள் புழக்கம், பண மோசடி, விவாகரத்து என தொடர்ந்து பாலிவுட் தொடர்பான எதிர்மறையான செய்திகளே வெளியாகி வந்த நிலையில், பாலிவுட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு இறுதியில் ஏகப்பட்ட பிரபல நடிகர்களின் திருமணங்கள் அரங்கேற காத்திருக்கின்றன.

கத்ரீனா கல்யாணம்

கத்ரீனா கல்யாணம்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுஷல் இருவரும் அடுத்த மாதம் கோலாகலமாக திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர். விரைவில் அவர்களின் திருமண தேதி மற்றும் திருமண வைபவம் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரன்பீர் - ஆலியா திருமணம்

ரன்பீர் - ஆலியா திருமணம்

நீண்ட நாட்களாக பாலிவுட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரன்பீர் கபூர் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஆலியா பட் ஷேர் செய்திருந்தார்.

ராஜ்குமார் ராவ் திருமணம்

ராஜ்குமார் ராவ் திருமணம்

பாலிவுட்டின் திருமண வைபவத்தை இம்மாதமே தொடங்க உள்ளார் நடிகர் ராஜ்குமார் ராவ். வரும் நவம்பர் 12ம் தேதி ஜெய்ப்பூரில் ராயல் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ள அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. வரும் நவம்பர் 10ம் தேதி முதல் மெஹந்தி, சங்கீத் போன்ற திருமண கொண்டாட்டங்கள் ஜெய்ப்பூரில் ஆரம்பம் ஆக உள்ளதாம்.

குடும்பத்தார் சூழ

குடும்பத்தார் சூழ

கொரோனா பரவல் குறைந்து இருந்தாலும், கொரோனா அச்சம் காரணமாக அதிக நபர்களுக்கு அழைப்பு விடுக்க வில்லையாம். வெறும் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ குறைவான கூட்டத்துடனே இந்த திருமணத்தை நடத்த நடிகர் ராஜ்குமார் ராவ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

10 ஆண்டுகள் காதலித்து

10 ஆண்டுகள் காதலித்து

கடந்த 2010ம் ஆண்டு வெளியான ரான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஜ்குமார் ராவ் ராகிணி எம்.எம்.எஸ், சைத்தான், தலாஷ், குயின், சிட்டி லைட்ஸ், நியூட்டன், லூடோ, தி ஒயிட் டைகர், ரூஹி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். சிட்டி லைட்ஸ் படத்தில் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த நடிகை பத்ரலேகாவை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், வரும் நவம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X