எங்க பார்த்தாலும் டைவர்ஸா இருக்கு.. கல்யாணம் எல்லாம் இனிமே ஹேப்பி நியூஸ் இல்லை.. பூனம் பாண்டே பளிச்!

மும்பை: ஆடைகளை துறந்து ஆட்டம் போட்டு ரசிகர்களை உறைய வைத்த பாலிவுட் நடிகையும் ரியாலிட்டி ஷோ ஸ்டாருமான பூனம் பாண்டே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது, அவரிடம் திருமணம் குறித்து பத்திரிகையாளர்கள் சிலர் கேள்வி எழுப்ப, ஆளை விடுங்கப்பா சாமி என்கிற ரேஞ்சுக்கு இந்தியில் பேசியுள்ள வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.

தான் இறந்து விட்டதாக பொய் விளம்பரம் கொடுத்து ஒரே நாளில் இந்திய மீடியாக்களையும், ரசிகர்களையும் அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், அது ஃபேக் டெத் என தெரிய வந்ததும் பலரும் ரவுண்டு கட்டி பூனம் பாண்டேவை கைது செய்ய வேண்டும் என கொந்தளித்தனர்.

poonam pandey divorce marriage


புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இப்படி செய்தேன் என பூனம் பாண்டே மன்னிப்புக் கேட்டும் வீடியோக்களை வெளியிட்டார். அதன் பின்னர், அவர் மீண்டும் கவர்ச்சி போஸ்ட்டுகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

மரண வதந்தி: எந்தவொரு பிரபலமும் செய்யாத ஒரு காரியமான தனக்குத் தானே மரண வதந்தியை உருவாக்கி அதனை விளம்பரமாக மாற்றி பல கோடிகள் காசு பார்த்தார் பூனம் பாண்டே என அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறைந்தது 1.5 வருடமாவது அவரை சிறையில் அடைக்க வெண்டும் என்றெல்லாம் பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் மீண்டும் பாலிவுட்டில் செலிபிரிட்டியாகவே சுற்றி வருகிறார் பூனம் பாண்டே.

நிர்வாணமாக: இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெற்றிப் பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுகிறேன் என பேசியதில் இருந்தே டிரெண்டானவர் தான் பூனம் பாண்டே. அதன் பின்னர் தயாரிப்பாளர் சாம் பாம்பேவுடன் இணைந்து ஏகப்பட்ட நிர்வாண வீடியோக்களில் நடித்து சம்பாதித்து வந்த பூனம் பாண்டே ஒரு கட்டத்தில் அவரையே திருமணம் செய்துக் கொண்டு ஏழு ஜென்மம் சேர்ந்து வாழப் போகிறோம் என்றெல்லாம் போஸ்ட் போட்டிருந்தார்.

ஹனிமூனில் பலாத்காரம்: ஆனால், திருமணமாகி 13 நாட்களிலேயே கோவாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் தனது கணவர் சாம் பாம்பே தன்னை பலவந்தப்படுத்துவதாகவும் மிருகம் போல அடித்து துன்புறுத்துவதாகவும் போலீஸில் புகார் அளித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் பூனம் பாண்டே.

திருமணம் ஹேப்பி நியூஸ் இல்லை: கங்கனா ரனாவத்தின் லாக்கப் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பின்னர் மீண்டும் பாலிவுட் செலிபிரிட்டியாக வலம் வரும் பூனம் பாண்டே சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, திருமணம் குறித்த கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்ப, ”திருமணம் எப்படி சந்தோஷமான செய்தியாக இருக்க முடியும், சமீப காலமாக எங்கே திரும்பினாலும் விவாகரத்து கதைகள் அதிகம் கேட்கப்படுகின்றன” என பதில் அளித்துள்ளார். மறு திருமணம் செய்யப் போவதில்லை என்றும் சிங்கிளாகவே பிடித்த வாழ்க்கையை பிடித்தவர்களுடன் வாழ முடிவு செய்திருப்பதை தனது பேச்சிலேயே உணர்த்திவிட்டு சென்றுள்ளார் பூனம் பாண்டே என்று ரசிகர்கள் அவரது கருத்தை வரவேற்று வருகின்றனர். வரும் காலத்தில் எல்லாம் திருமணம் பெரிய பாரமாக மாறிவிடும் என்று சில பிரபலங்கள் சொல்வதை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம் என்றும் 6 மாசத்துக்கு கல்யாண மண்டபமே கிடைக்காமல் புக் ஆகி கிடக்கின்றன. கோடிக்கணக்கில் சில 1000 பேர் மட்டுமே விவாகரத்து செய்வதால் அதை பொருட்படுத்த வேண்டாம் என்றும் ரசிகர்கள் பூனம் பாண்டேவின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X