பாலிவுட்டில் ரீமேக் ஆகும் பா ரஞ்சித்தின் படம்.. என்ன படம்னு பாருங்க!
சென்னை: இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தமிழில் வெளியாகி ஹிட்டான படம் ஒன்று பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது.
தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகி ஹிட்டான படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது காலம் காலமாக இருந்து வருகிறது.
தமிழில் ஹிட்டான படங்களில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

தமிழ் படங்கள்
அந்த வகையில் தமிழில் மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா படம் இந்தியில் ஹிருத்திக் ரோஷன், சயீப் அலிகான் நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது. விக்ரம் நடித்த அந்நியன் படத்தை இயக்குநர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். இந்த படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

அதிகளவு மலையாள படங்கள்
இதேபோல் மாநகரம் படம் இந்தியில் மும்பைக்கார் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராட்சசன் படம் இந்தியில் அக்ஷய்குமார் நடிக்க ரீமேக் ஆக உள்ளது.

விஜய் சேதுபதி படம்
இதேபோல் விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான 96 படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் படத்தை இந்தியில் அஜய் கபூர் தயாரிக்கிறார்.

கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ்
இநிநிலையில் மற்றொரு தமிழ் படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான படம் மெட்ராஸ். கார்த்தி, கேத்தரின் தெரேசா லீடிங் ரோலில் நடித்த இப்படத்தில் கலையரசன், ரித்விகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விரைவில் அறிவிப்பு
இந்நிலையில் இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியில் யார் ரீமேக் செய்கிறார்கள் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











