“பரமசுந்தரி“துள்ளலான பாடல்… இளைஞர்களை ஆட்டம் போடவைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை : ஏ ஆர் ரஹ்மான் இசையில் கடந்த மாதம் வெளியான மிமி படத்தில் இடம்பெற்ற பரமசுந்தரி பாடல் 100மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

க்ரீதி சனோன், பங்கஜ் த்ரிபாதி நடிப்பில், லக்‌ஷ்மண் உடேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நகைச்சுவைப் படம் 'மிமி'.

2010-ம் ஆண்டு வெளியான mala aai vahhaychhy என்ற மராத்தி படத்தின் ரீமேக்தான் மிமி திரைப்படம்.

மிமி திரைப்படம்

மிமி திரைப்படம்

வாடகைத்தாயை தேடி இந்தியா வரும் அமெரிக்க தம்பதியினர் கண்ணில் சிக்குகிறார் மிமி. டான்சராக வலம் வரும் அவருக்கு, தனது கதாநாயகி கனவை அடைய பணம் தேவைப்படுகிறது. ஆகவே, வேறு வழியில்லாமல் தனது லட்சியத்தை அடைய, வாடகைத்தாய் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். காலம் மிமிக்கு வேறொரு முடிவைத் தர, அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இந்தப் படம் ரசிகர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தைத் தந்திருக்கிறது. படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மண் உடேகர், இங்கிலீஷ் விங்கிலீஷ்,டீயர் ஜின்தகி, உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இயக்குநராக அவருக்கு இது 4-வது திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் முக்கியமான உரையாடலை முன்னெடுத்து சென்றுள்ள இயக்குநர் லக்‌ஷ்மண் உடேகருக்கு பாராட்டுக்கள்.

பரமசுந்தரி

பரமசுந்தரி

நடிகை க்ரித்தி சனோன், பங்கஜ் திரிபாதி உள்ளிட்டவர்கள் நடித்த மிமி திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு மிக முக்கியக் காரணம் அந்த படத்தில் இடம்பெற்றிருந்த பரமசுந்தரி என்ற பாடல்தான். படத்தின் ரிலீஸுக்கு முன்னரே இணையத்தில் கவனம் பெற்ற இந்த பாடல், மொழி தாண்டியும் பல மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

100 மில்லியன் பார்வையாளர்

100 மில்லியன் பார்வையாளர்

ஒரு நடனப்பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாவதாக இருந்தது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஹ்மான் இசையில் இப்படி ஒரு துள்ளலான பாடல் வெளியாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த பாட்டை அவரின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் இந்த பாடல் இப்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

அசத்தலான நடனம்

இந்தப் பாடலில் கிருத்தி சனோன்னா தன்னுடைய நளினம் மிகுந்த நடனத்தின் மூலம் அனைவரையும் தன் பங்குக்கு ஆட்டம் போட வைத்திருக்கிறார். பாலிவுட்டிற்கே உரித்தான நடன அசைவில் அனைவரையும் கட்டிப்போட்டு ஒரு குத்தாட்டம் ஆடவைத்துள்ளார். கீர்த்தியின் முகபாவங்களும் செல்லச் சீண்டல்களும் நடன அசைவுகளும் பிரமிக்க வைக்கின்றன.

ரீமேக்கில் கீர்த்திசுரேஷ்?

ரீமேக்கில் கீர்த்திசுரேஷ்?

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது ரீமேக் செய்வதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. தமிழ் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X