காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூனம் பாண்டே.. மனைவியை தாக்கிய கணவர் அதிரடி கைது

மும்பை: கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவை மீண்டும் கொடுரமாக தாக்கி உள்ளார் அவரது கணவர் சாம் பாம்பே.

காயத்துடன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பூனம் பாண்டே கணவர் மீது அளித்த புகாரின் பேரில் சாம் பாம்பேவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருமணமாகி ஹனிமூனுக்காக கோவா சென்றபோதே சாம் பாம்பே பூனம் பாண்டேவை தாக்கி இருந்தார்.

கவர்ச்சி டு ஆபாசம்

கவர்ச்சி டு ஆபாசம்

சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கலக்கி வந்த பூனம் பாண்டே தனது ரூட்டை மாற்றிக் கொண்டு நிர்வாண படங்களில் நடிக்கத் தொடங்கிய பின்னர், பாலிவுட்டில் இருந்து விலகினார். ஆபாச பட நடிகையான பூனம் பாண்டே, தயரிப்பாளர் சாம் பாம்பே என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். காதலருடன் நிர்வாணமாக இருக்கும் ஏகப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வைரலாக்கினார்.

தயாரிப்பாளருடன் திருமணம்

தயாரிப்பாளருடன் திருமணம்

கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி தொழிலதிபரும் தயாரிப்பாளருமான சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டார் பூனம் பாண்டே. திருமணமான புகைப்படங்களை பதிவிட்டு, ஏழு ஜென்மத்திற்கும் உன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என கணவன் சாம் பாம்பே பற்றி உருகி இருந்தார்

ஹனிமூனிலே அடி உதை

ஹனிமூனிலே அடி உதை

திருமணம் ஆன கையுடன் ஹனிமூனுக்காக இருவரும் கோவா சென்றனர். ஹனிமூன் வந்த இடத்திலும் கணவர் பிசியாக வேலை செய்வதாகவும், அவரை கவர என்னவெல்லாம் செய்கிறேன் என்றும் ஆடையை கழட்டும் அந்தரங்க வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். ஆனால், திடீரென கணவர் சாம் பாம்பே கொடூரமாக என்னை தாக்கி விட்டார் என போலீஸில் புகார் அளித்தார்.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!
13 நாட்களிலேயே

13 நாட்களிலேயே

திருமணமான 13 நாட்களில் ஹனிமூன் சென்ற நிலையில், தனது கணவர் தன்னை காட்டுத் தனமாக தாக்கினார் என்றும், பலாத்காரம் செய்தார் என்றும் நடிகை பூனம் பாண்டே பரபரப்பு புகார் அளித்து சாம் பாம்பே கைது செய்யப்பட்ட சம்பவம் ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

விவாகரத்து செய்யல

விவாகரத்து செய்யல

கோவா போலீசார் சாம் பாம்பேவை கைது செய்த நிலையில், இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ மாட்டேன் என சொன்ன பூனம் பாண்டே சில நாட்களிலேயே அவருடன் சுமூக பேச்சுவார்த்தை மூலம் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இருவரும் விவாகரத்து செய்துக் கொள்ளப் போவதில்லை என அறிவித்தனர்.

மீண்டும் சண்டை

மீண்டும் சண்டை

ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் நடந்த பிரச்சனைக்கு பிறகு மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையே தற்போது மீண்டும் ஒரு பயங்கரமான சண்டை நடந்திருக்கிறது. கணவர் சாம் பாம்பே தன்னை மீண்டும் சித்ரவதை செய்து அடித்து உதைக்கிறார் என பூனம் பாண்டே பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

கணவர் கன்னாபின்னாவென தாக்கிய நிலையில், ஏகப்பட்ட காயங்கள் நடிகை பூனம் பாண்டேவுக்கு ஏற்பட்டு அவர் தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கணவர் தன்னை கொடூரமாக தாக்கினார் என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் பூனம் பாண்டே

சாம் பாம்பே கைது

சாம் பாம்பே கைது

பூனம் பாண்டேவின் இந்த புகாரை ஏற்ற போலீசார் அவரது கணவர் சாம் பாம்பேவை அதிரடியாக கைது செய்துள்ளனர். இதற்கு மேல் பூனம் பாண்டே கணவர் சாம் பாம்பேவுடன் சேர்ந்து வாழ மாட்டார் என்றும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X