சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது.. கங்கனா ரனாவத்தின் ரியாலிட்டி ஷோவில் பூனம் பாண்டே போட்டியாளராம்!

மும்பை: லாக்கப் எனும் சர்ச்சைக்குரிய ரியாலிட்டி ஷோவை நடிகை கங்கனா ரனாவத் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்சார் பிரச்சனை ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காக ஒடிடியில் அதனை வெளியிட முடிவு செய்துள்ளார் கங்கனா ரனாவத்.

இந்த ரியாலிட்டி ஷோவில் முதல் போட்டியாளராக சர்ச்சைகளுக்கு பெயர் போன பூனம் பாண்டே பங்கேற்க போகிறாராம்.

சர்ச்சைகளின் தலைவி

சர்ச்சைகளின் தலைவி

தாம்தூம், தலைவி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைகளின் தலைவியாக பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில், அவர் லாக்கப் எனும் ரியாலிட்டி ஷோவை ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

யாருடன் இணைந்து தெரியுமா

யாருடன் இணைந்து தெரியுமா

அடல்ட் வெப் தொடர்களை அநியாயத்துக்கு கட்டவிழ்த்து வரும் ஆல்ட் பாலாஜி ஒடிடி தளத்தின் சொந்தக்காரர் ஏக்தா கபூர் மற்றும் கங்கனா ரனாவத் இருவரும் இணைந்து ஆரம்பிக்கப் போகும் இந்த ரியாலிட்டி ஷோ ஆல்ட் பாலாஜி மற்றும் எம்எக்ஸ் பிளேயரில் விரைவில் வெளியாக போகிறது.

போட்டியாளராக பூனம் பாண்டே

போட்டியாளராக பூனம் பாண்டே

சர்ச்சைகளின் சங்கமத்தில் இன்னொரு சர்ச்சை நாயகி முதல் போட்டியாளராக நுழைந்தால் எப்படி இருக்கும் என திட்டமிட்ட நடிகை கங்கனா ரனாவத் ஆபாச பட நடிகை பூனம் பாண்டேவை முதல் போட்டியாளராக அந்த லாக்கப் ரியாலிட்டி ஷோவில் களமிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்சார் பிரச்சனை இல்லை

சென்சார் பிரச்சனை இல்லை

ரியாலிட்டி ஷோவே சர்ச்சைகளை கிளப்பும் விதமாகத்தான் இருக்கும் என்றும் அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் சர்ச்சைகளை சட்டையாக தைத்துப் போட்டு திரிபவர்கள் எனக் கூறப்படுகிறது. டிவியில் வெளியிட்டால் தணிக்கை பிரச்சனை மற்றும் தடை வேண்டும் என கிளம்பி விடுவார்கள் என ஒடிடியில் இதனை வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனால், மத்திய அரசு ஒடிடியிலும் தணிக்கை நடத்த தொடர்ந்து முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுஸ்மிதா சென்னோட எக்ஸ்

சுஸ்மிதா சென்னோட எக்ஸ்

பூனம் பாண்டே மட்டுமின்றி நடிகை சுஸ்மிதா சென்னின் எக்ஸ் காதலரான ரோமன் ஷால் இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் மற்றும் புரமோக்கள் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X