கணவருக்காக சாப்பிடாமல் ’கர்வா சவுத்’ விரதம் எல்லாம் இருந்த பூனம் பாண்டேவுக்கா இந்த நிலைமை?
மும்பை: கட்டிய கணவர் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என வட இந்திய மனைவிமார்கள் எடுக்கும் 'கர்வா சவுத்' விரதத்தை சமீபத்தில் நடிகை பூனம் பாண்டே எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நம்ம ஊரில் சுமங்கலி விரதம் போலத்தான் அங்கே கர்வா சவுத் விரதம்.
திருமணம் ஆன உடனே 7 ஜென்மங்கள் உன்னோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என சொல்லி விட்டு கணவர் அடித்ததாக புகார் அளித்த பூனம் பாண்டேவுக்கு மீண்டும் அதே போல ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

முகத்தில் காயம்
கணவர் நல்லா இருக்க வேண்டும் என கர்வா சவுத் விரதத்தை சமீபத்தில் எடுத்த கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவை அவருடைய கணவர் சாம் பாம்பே பயங்கரமாக அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்த சண்டையில் கண், தலை மற்றும் முகத்தில் பூனம் பாண்டேவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

போலீசில் புகார்
கணவர் தாக்கிய நிலையில், போலீசாரிடம் புகார் அளித்து விட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார் பூனம் பாண்டே. மனைவியை அடித்து துன்புறுத்திய சாம் பாம்பேவை போலீசார் கைது செய்து இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை ஏன் இப்படி மிருகத்தனமாக தாக்கினீர்கள் என விசாரித்து வருகின்றனர்.
சுமங்கலி விரதம்
நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்கள் மற்றும் பிரைவேட் ஆப்பில் பதிவிட்டு சம்பாதித்து வரும் நடிகை பூனம் பாண்டே தனது கணவர் நல்லா இருக்கணும் என சமீபத்தில் கர்வா சவுத் எனும் சுமங்கலி விரதத்தை மேற்கொண்டார். தற்போது அவர் மீண்டும் கணவர் மீது புகார் கொடுத்து சாம் பாம்பே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து #PoonamPandey ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

உணவுப்பிரியர்
அந்த வீடியோவில் தான் ஒரு உணவுப் பிரியர் என்றும் ஒரு பொழுது கூட உணவின்றி இருந்தது இல்லை. ஆனால், என் காதல் கணவருக்காக இந்த கர்வா சவுத் விரதத்தை எதுவுமே சாப்பிடாமல் எடுத்து வருகிறேன் என பூனம் பாண்டே ஷேர் செய்துள்ளார். அதனை குறிப்பிட்டு பூனம் பாண்டேவின் காதலுக்கு கொஞ்சமும் தகுதியற்றவர் சாம் பாம்பே என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
Recommended Video

என்ன பிரச்சனை
ஆனால், இதுதொடர்பாக இதுவரை நடிகை பூனம் பாண்டேவோ அல்லது அவரது கணவர் சாம் பாம்பேவோ அதிகாரப்பூர்வமாக எந்தவொரு பதிவையும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை. என்ன காரணத்திற்காக சாம் பாம்பே இப்போ இப்படி தாக்கி உள்ளார் என்கிற கேள்வியை பூனம் பாண்டேவிடம் சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். விரைவில் இதுபற்றி அவர் தெளிவாக விளக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











