இரண்டாவது குழந்தைக்கு ரெடியான பிரபல பாலிவுட் நடிகை: இதுவும் அதேமாதிரி தானா? ரசிகர்கள் குழப்பம்
மும்பை: பாலிவுட் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட வயது குறைந்த பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் ஜோடிக்கு சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தற்போது பிரியங்கா சோப்ராவின் இரண்டாவது குழந்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் தமிழன்
2000ம் ஆண்டு உலக அழகியாக முடிசூடிய பிரியங்கா சோப்ரா, 'தமிழன்' படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். தமிழில் வெளியான இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், பிரியங்கா சோப்ராவிற்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அதனைத் தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்திய பிரியங்கா சோப்ரா, படிப்படியாக முன்னணி நடிகையாக ரவுண்டு வரத் தொடங்கினார்.

சக்திவாய்ந்த பெண்
நடிகையாக தனது பயணத்தை தொடங்கினாலும், பிரியங்கா சோப்ரா மிகச் சிறந்த ஆளுமையாகவும் விளங்கினார். இதன் அடிப்படையில், உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. இதன்மூலம் பிரியங்கா சோப்ராவின் செல்வாக்கு நாளாக நாளாக உச்சம் தொட்டது.

நிக் ஜோனாசுடன் திருமணம்
பாலிவுட்டில் படு பிஸியாக இருந்த பிரியங்கா சோப்ரா, பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக, 2018ல் பாடகர் நிக் ஜோனாசை காதல் திருமணம் செய்து கொண்டார். தன்னைவிட 11வயது இளயவரான நிக் ஜோனாஸுடன் பிரியங்காவின் திருமண வாழ்க்கை, சிறப்பாகவே சென்று வருகிறது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை
பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்தனர். அந்த குழந்தையின் பெயர் மல்டி மேரி என இருவரும் சேர்ந்தே சமூகவலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினர். மேலும், 'வாடகைத் தாய் மூலமாக எங்கள் குழந்தையை பெற்றதில் நாங்கள் ரொம்ப மகிழ்ச்சியாகவே இருக்கிறோம், இந்த ஸ்பெஷலான நேரத்தில் நாங்கள் குடும்பத்தில் முழு கவனத்தையும் செலுத்த உள்ளதாக கூறி, அனைவருக்கும் நன்றி" என குறிப்பிட்டிருந்தனர்.

இரண்டாவது குழந்தைக்கு ரெடி
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா தனது இரண்டாவது குழந்தையையும் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இது உண்மைதானா என ரசிகர்கள் ரொம்பவே குழப்பத்தில் உள்ளனர். ஆனாலும், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனா தம்பதியினருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











